தொகுதி பங்கீடு குழு.. முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் திமுக? எதிர்பார்ப்பில் காங்கிரஸ், விசிக

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சார்பாக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையில் அமைக்கப்பட உள்ள இந்தக் குழுவில் கே.என்.நேரு, ஆ.ராசா, திருச்சி சிவா, பொன்முடி, எவ வேலு உள்ளிட்டோர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை குழு கூட அமைக்கப்படவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பேச்சுவார்த்தை குழு அமைத்துவிட்டது. கடந்த மாதமே இந்தக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

DMK

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு

கடந்த லோக்சபா தேர்தலின் போது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை திமுக ஒரே நாளில் அறிவித்தது. ஆனால் இம்முறை கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தக் குழுவும் தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து வருகின்றனர்.

ஸ்டாலின் அப்டேட்

ஆனால் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எதிர்பார்ப்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு எப்போது அமைக்கப்படும் என்பதே கேள்வியாக உள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஏற்கனவே விரைவில் திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்று ஸ்டாலின் கூறி இருந்தார்.

திமுக பேச்சுவார்த்தை குழு

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும் குழு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் குழு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவில் ஆ.ராசா, திருச்சி சிவா, பொன்முடி, எவ வேலு உள்ளிட்டோர் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோரும் இடம்பெறலாம்.

170 தொகுதிகளில் திமுக?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தக் குழுவினார் தான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக கூட்டணியில் புதியக் கட்சிகள் இணைந்திருக்கும் சூழலில், யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் 170 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+