Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலுக்காக எவ்வளவு வேலை பார்க்கிறோம்.. போகிற போக்கில்.. காங்கிரசுக்கு நங்குன்னு குட்டு வைத்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையை தொடங்கும் திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு போகிற போக்கில் திமுக நங்கென்று குட்டு வைத்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மேலிடக் கூட்டம் மிக முக்கியமான கட்டத்தை எட்டியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

congress

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தது.

காங்கிரஸ் குரலே மாறிவிட்டது

டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் மீட்டிங்கிற்கு பின் அப்படியே காங்கிரஸ் குரலே மாறி உள்ளது. பெரிதாக திமுகவை அட்டாக் செய்து பேசாமல் இருந்த இப்போது விரக்தியில் பேச தொடங்கி உள்ளது. செல்வப்பெருந்தகை மீட்டிங்கிற்கு பின் பேசுகையில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததால் நிறைய பிரச்சனை வந்தது. நிறைய தர்மசங்கடம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் கூட்டணி சரியாக அமைக்க முடியாமல் போனது.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் காந்தி உட்பட இங்கே வர ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் திமுக ரெடியா? நாங்கள் ரெடி.. அவர்கள் ரெடியா? சரியான நேரத்தில் கூட்டணி அமைத்தால்தான் பணிகளை செய்ய முடியும். பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் திமுக மீது எல்லோருக்கும் வருத்தம்தான் உள்ளது என்று கூறி உள்ளார்.

திமுக அறிக்கை - இதை கவனிச்சீங்களா?

இதையடுத்தே பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையை தொடங்கும் திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்காக வெளியிட்ட அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு போகிற போக்கில் திமுக நங்கென்று குட்டு வைத்துள்ளது.

நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள்- குழுவினர் என இலட்சக்கணக்கானோர், கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.
'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி', மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு |, டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

இனி வரும் நாட்களில் வீடு வீடாக, வெல்லும் தமிழ்பெண்கள் பரப்புரையை, மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது.

மேலும், வாக்குச்சாவடி குழுவினருக்கு நான்கு பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.

வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது, என்று திமுக தெரிவித்துள்ளது.

அதாவது தேர்தல் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.. நீங்கள் ஏன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அவசரப்படுகிறீர்கள் என்று காங்கிரஸ் தலையில் நங்கென்று கொட்டி உள்ளது திமுக!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+