இன்னும் சிஎம்னு நினைப்பு..மக்கள் தான் தூக்கி எரிஞ்சிட்டாங்களே! வயிற்றெரிச்சலில் திமுக.. விளாசிய தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாக கூறி தஞ்சாவூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சரும் என்பது போல் திமுக தலைமை இருப்பதாக விமர்சித்துள்ளது தமிழக வெற்றி கழகம்.

கதாது பகுதியில் அணை கட்ட வேண்டும் என கர்நாடகா பல ஆண்டுகளாக பிடிவாதம் பிடித்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் விரிவான திட்ட அறிக்கைக்கும் அனுமதி தந்துவிட்டது. மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தடுத்து வைக்கும்.

Mekedatu Dam

இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசனம், குடிநீர் ஆகியவற்றுக்கான நீர் தேவை வெகுவாக பாதிக்கப்படும். கடந்த பல ஆண்டுகளாகவே காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என கர்நாடகா பிடிவாதமாக இருக்கிறது. தமிழகத்தின் சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேகதாது விவகாரம்

இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு தமிழகம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழக அரசு

ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாக கூறி தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாக தமிழக வெற்றிக்கழகம் விமர்சித்துள்ளது.

தவெக

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில்," மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே? தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.

திமுக

ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே. யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது. மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது." எனகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+