பி.டி.அரசக்குமார் வரிசையில் மேலும் ஒருவர்... பாஜகவில் இருந்து இழுக்க திமுக முயற்சி
சென்னை: பாஜகவில் செய்தித் தொடர்பாளராக இருந்த பி.டி.அரசகுமார் சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தது போல் இப்போது மேலும் ஒருவரை இழுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.
திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியை பாஜக இழுத்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
திமுகவில் இருந்து இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள் என கூறப்படும் நிலையில் திமுக தலைமை பதில் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

திமுக முயற்சி
தமிழக அரசியலில் அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் இருந்த அரசியல் யுத்தம் இப்போது பாஜகவுக்கும்-திமுகவுக்கும் என மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறி மாறி தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வலைதளப் போர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவுக்கு எல்.முருகன் தலைவராக பதவியேற்ற பின்னர், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை பாஜகவில் இணைக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.

பால்கனகராஜ்
அந்த வகையில் திமுகவில் துணைப் பொதுசெயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், என பலரும் பாஜகவில் இணைந்துவிட்டனர். இன்னும் பலரை வெவ்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு இழுக்க தீவிர மூவ்மெண்ட்கள் நடந்து வருகின்றன. கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் மேலும் சிலர் பாஜகவில் ஐக்கியமாகக் கூடும் எனத் தெரிகிறது.

பாஜகவில் இருந்து
பாஜகவில் செய்தித்தொடர்பாளராக இருந்த பி.டி.அரசக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் மூலமாக பாஜகவில் மேலும் ஒரு முக்கிய பிரமுகருக்கு திமுக தூண்டில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. வி.பி.துரைசாமியை திமுகவில் இருந்து அழைத்துச் சென்றதற்கு பதிலடியாக கூட இதைக் கருதலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், சில முக்கிய உறுதிமொழிகளும் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் பலர்
சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க திராவிடக் கட்சிகளில் இருந்து விலகி இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள், பொறுத்திருந்து பாருங்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கடந்த மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சிறிய கட்சிகளை நடத்தும் தலைவர்களிடமும் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணையக் கோரும் அழைப்புகள் கொரோனாவுக்கு பின் தொடங்குமாம்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications