நம்ம கோட்டையில் திமுக கொடியா.. வேதனையுடன் வேடிக்கை பார்த்த பொள்ளாச்சி அதிமுகவினர்

திமுகவின் கோட்டையான கொங்கு மண்டலம் திமுக வசமானது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    MK Stalin: ஆட்சி மாற்றம் உறுதி! கொங்கு மண்டலத்தில் ஸ்டாலின் பேச்சு- வீடியோ

    சென்னை: "வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இங்க தோக்கறவன் ஜெயிப்பான்.. ஜெயிக்கிறவன் தோப்பான்" என்று ஒரு சினிமாவில் வசனம் வருமே.. அதுதான் நேற்றைய திமுகவின் பொள்ளாச்சி கூட்டத்தை பார்த்ததும் நினைவுக்கு வந்தது!

    பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தவரை, கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களை எடுத்துக் கொண்டால், 8 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரே ஒருமுறைதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதனால் அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றுதான் பொள்ளாச்சி!

    இதற்கு முக்கிய காரணம், பொள்ளாச்சி பக்கம் இருப்பவர்களில் பெரும்பாலானோர் எம்ஜிஆர் ரசிகர்கள் என்பதுதான். ஜெயலலிதா இருக்கும்போதும் இதே பலத்தைதான் தக்க வைத்து கொண்டிருந்தார். எனவேதான் பொள்ளாச்சியில் திமுகவால் சோபிக்க முடியாமலேயே போய்விட்டது.

    ஈஸ்வரன்

    ஈஸ்வரன்

    கடந்த முறை 2014-ல் நடைபெற்ற தேர்தலின்போது, திமுக சார்பாக பொங்கலூர் பழனிசாமியை நிறுத்தினார்கள். ஆனால் அவரால் 3-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. 2-வது இடம் கொங்கு மண்டல ஈஸ்வரனுக்கு போய் சேர்ந்தது.

    அபார வெற்றி

    அபார வெற்றி

    அப்படி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக, இன்று அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பாலியல் சம்பவம், பாஜக மீதான வெறுப்பு உள்ளிட்ட காரணங்கள் என்று லிஸ்ட் போட்டு சொன்னாலும், விஷயம் இதுதான்.. அதிமுக கோட்டை என்ற இமேஜ் இன்று சல்லி சல்லியாக உடைத்தெறியப்பட்டுள்ளது.

    நன்றி அறிவிப்பு

    நன்றி அறிவிப்பு

    இந்த முறை நேரடியாக இந்த தொகுதியில் போட்டியிட்டு, திமுக வெற்றி பெற்று, அதற்காக வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து கூட்டம் நடத்தி உள்ளது. வெற்றி பெற்ற 37 இடங்களிலும் திமுக நன்றி தெரிவித்து வருகிறது என்றாலும் பொள்ளாச்சியில் அது கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல்தான்!

    ஸ்டாலின் பெருமிதம்

    ஸ்டாலின் பெருமிதம்

    "கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்று கூறுவார்கள். ஆனால், அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கூற்றை மக்கள் உடைத்து ஆயிரத்தில் அல்ல, லட்சத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் மக்கள்" என்று ஸ்டாலின் நேற்று பெருமையாகவே சொன்னார்.

    உற்சாகம்

    உற்சாகம்

    அது மட்டுமில்லை.. விழாவுக்கான ஏற்பாடே அமர்க்களப்பட்டுவிட்டது. பொள்ளாச்சி பக்கம் எப்பவுமே எந்த பக்கம் திரும்பினாலும் அதிமுக கொடிதான் இத்தனை காலம் பறந்து கொண்டிருந்தது. அது கோலம் நேற்று மாறியது. திமுக கொடிகளை எங்கு பார்த்தாலும் பறக்கவிட்டு உற்சாகமானார்கள் தொண்டர்கள். ஒரு பக்கம் கொடிகள், மற்றொருபக்கம் தொண்டர்களின் உற்சாகம்.. இதையெல்லாம் பார்த்த அதிமுகவின் உடன்பிறப்புகளோ வருத்தம் கலந்த அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சோகத்தில் தொண்டர்கள்

    சோகத்தில் தொண்டர்கள்

    கொங்கு மண்டல கோட்டையை பறிகொடுத்ததற்காக யாரிடம் நொந்து கொள்வது, தோற்று போனதற்கு யாரை காரணம் காட்டுவது என தெரியாமல் அதிமுக தொண்டர்கள் சோகத்துடன் இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்களாம்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+