"ஹெவி வெயிட்".. அப்பப்பா ஸ்டாலின் கொஞ்சம் கூட விடுவதாக இல்லை.. இந்த 20 பேரை பாருங்க.. பரபர பிளான்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை போட்டியிடுவதற்கு திமுகவில் பல மூத்த உறுப்பினர்களுக்கும்.. முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
திமுக சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. 173 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார்.
நேற்று முதல்நாளே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின் இன்றுதான் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று இதற்கான அறிவிப்பு வெளியானது.

எத்தனை பேர்
பத்மநாபபுரம் தொடங்கி கொளத்தூர் வரை 173 இடங்களுக்கான பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டார். சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பாக உதயநிதி போட்டியிடுகிறார். திமுக சார்பாக இன்று வெளியிடப்பட்டு இருக்கும் லிஸ்ட் மிகவும் கலவையாக அமைந்துள்ளது.

கலவை
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், இந்நாள் எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூத்த உறுப்பினர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் .யாருக்கும் தொகுதிகளை மறுக்காமல் அவர்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளை ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

20 பேர்
முக்கியமாக திமுக பட்டியலில் இடம்பெற்று இருக்கும் பின் வரும் 20 வேட்பாளர்கள் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். அதிக வெற்றி வாய்ப்பு உள்ள, தங்கள் தொகுதியில் பிரபலமாக இருக்கும் நபர்களை தேடி பிடித்து ஸ்டாலின் நிற்க வைத்துள்ளார்,.
ராதாபுரம் - அப்பாவு,
ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்,
தூத்துக்குடி - கீதா ஜீவன்
திருச்சுழி - தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்
போடி - தங்கதமிழ்ச்செல்வன்
திருப்பத்தூர் - ஆர்.பெரியகருப்பன்,
திருவாரூர் - கலைவாணன்
மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
கரூர் - வி.செந்தில்பாலாஜி,
அரவக்குறிச்சி - இளங்கோ
தாம்பரம் - எஸ். ஆர் ராஜா
திருக்கோவிலூர் - பொன்முடி
திருவண்ணாமலை - எவ வேலு
காட்பாடி - துரைமுருகன்
சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்,
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்.

பிளான்
முக்கியமாக மூத்த நிர்வாகிகள், கட்சிக்குள் வாய்ஸ் இருக்கும் யாரையும் ஒதுக்காமல் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லேட்டாக இந்த பட்டியல் வெளியாகி இருந்தாலும் கூட.. யாருக்கும் அதிருப்தி ஏற்படுத்தாத வகையில் வேட்பாளர் பட்டியல் அமைந்துள்ளது. கோஷ்டி மோதல் உருவாக்கிவிட கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருந்துள்ளார்.

சிறப்பு
களநிலவரம் தெரிந்தவர்களை பார்த்து ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார்.அதிமுக சார்பாக நேற்று முதல்நாள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 177 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதே பாணியை தற்போது திமுகவும் பயன்படுத்தி உள்ளது.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி












Click it and Unblock the Notifications