தமிழகமெங்கும் 3 நாட்கள் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள்! தலைமைக்கழகம் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமெங்கும் பிப்ரவரி 16,17, 18, ஆகிய 3 நாட்கள் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

DMK campaign public meetings on February 16, 17 and 18 all over Tamil Nadu

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கழக முன்னணியினர் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க தலைவர் அவர்களின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்.

நாள்: 16-2-2024 (வெள்ளிக்கிழமை)

சிவகங்கை -மாண்புமிகு இ.பெரியசாமி
திருநெல்வேலி -திருமதி கனிமொழி கருணாநிதி, எம்.பி.
விழுப்புரம் -திரு. ஆர்.எஸ்.பாரதி
தூத்துக்குடி -திரு. பொன். முத்துராமலிங்கம்
கடலூர் -மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர்
திருபெரும்புதூர் -மாண்புமிகு மா.சுப்பிரமணியன்
ஈரோடு -மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நாமக்கல் -திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி.,
கன்னியாகுமரி -திரு. திண்டுக்கல் ஐ.லியோனி
மயிலாடுதுறை -பேராசிரியர் சபாபதிமோகன்
திருவண்ணாமலை -மாண்புமிகு முனைவர் கோவி.செழியன்

நாள் : 17-2-2024 (சனிக்கிழமை)

கிருஷ்ணகிரி -மாண்புமிகு பொதுச்செயலாளர் துரைமுருகன்
திருச்சி -கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,
திருப்பூர் -மாண்புமிகு கே.என்.நேரு
அரக்கோணம் -முனைவர் க.பொன்முடி
மதுரை -திரு. ஆ.இராசா, எம்.பி.,
விருதுநகர் -திருமதி கனிமொழி கருணாநிதி, எம்.பி.,
இராமநாதபுரம் -மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்
வேலூர் -மாண்புமிகு எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி -மாண்புமிகு மா.சுப்பிரமணியன்
கோவை -மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திண்டுக்கல் -திரு. பொன். முத்துராமலிங்கம்
சிதம்பரம் -மாண்புமிகு முனைவர் கோவி.செழியன்

18.2.24 ஞாயிறுக்கிழமை

திருவள்ளூர் -மாண்புமிகு பொதுச்செயலாளர் துரைமுருகன்
தஞ்சாவூர் - கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,
பெரம்பலூர் -முனைவர் க.பொன்முடி
கரூர் -திரு. ஆ.இராசா, எம்.பி.,
புதுச்சேரி -திரு. ஆர்.எஸ்.பாரதி
பொள்ளாச்சி -திரு. திருச்சி சிவா, எம்.பி.,
காஞ்சிபுரம் -மாண்புமிகு எ.வ.வேலு
தருமபுரி -திரு. எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி.,
நாகப்பட்டினம் -மாண்புமிகு எஸ்.எஸ். சிவசங்கர்
தேனி -திரு. பொன்.முத்துராமலிங்கம்
நீலகிரி -திரு. திண்டுக்கல் ஐ.லியோனி
தென்காசி -முனைவர் சபாபதிமோகன்
சேலம் -திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி.,
ஆரணி -மாண்புமிகு முனைவர் கோவி. செழியன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+