Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.." தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்த திமுக.. பாடல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு திமுக தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் திமுக பல்வேறு பிரச்சார யுக்திகளைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கான "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற திமுகவின் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் இப்போதே சூடுபிடித்துவிட்டது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

DMK campaign song released

தமிழகத் தேர்தல் களத்தில் பாடல் வழியாக அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளையும் கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரப் பாடல்களை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி இப்போது சட்டசபைத் தேர்தல் பரப்புரைக்கான திமுகவின் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டலப் பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற நிலையில், அதில் தான் இந்தப் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது.

கடந்த 2021 தேர்தல் சமயத்தில் திமுக சார்பில் இதேபோல ஒரு பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது. "ஸ்டாலின் தான் வராரு" என்று தொடங்கும் அந்த பாடல் மிக பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் திமுகவின் அனைத்துப் பிரச்சாரங்களிலும் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் தான் "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற திமுகவின் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+