திமுக வேற லெவல்.. போஸ்டர் ஒட்டி ஓட்டுக்கேட்டது அந்தக்காலம்! "DIGITAL BAG" பிரச்சாரம் இந்தக் காலம்!
சென்னை: டிஜிட்டல் பேக் மூலம் உதயசூரியனுக்கு ஓட்டுக்கேட்கும் புதிய டெக்னிக்கை செயல்படுத்தியிருக்கிறது திமுக தலைமை.
நகர்ப்புறப் பகுதிகளில் இந்த டிஜிட்டல் பேக் பிரச்சாரம் நல்ல முறையில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் மூலை முடுக்குகள், சந்துபொந்துகள் எல்லாம் டூவிலர் மூலம் எளிதாக பிரச்சாரம் செய்ய முடிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் சனிக்கிழமை 19-ம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் டிஜிட்டல் ஆயுதத்தை முழுமையாக இந்த தேர்தலுக்கு கையில் எடுத்திருக்கும் திமுக தலைமை, புதிய டெக்னிக் ஒன்றை பிரச்சாரத்திற்கு களமிறக்கியிருக்கிறது. அதாவது உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி, வாக்களிப்பீர் உதயசூரியன் என்ற வாசகங்கள் மக்களை கவரும் வகையில் டிஜிட்டல் பேக்கில் ஒளிரவிடப்படுகிறது.

பெரு நகரங்கள்
இதன்மூலம் பெருநகரங்களில் எளிதாக பிரச்சாரம் செய்ய முடிகிறது. டூவிலர்களிலும், பேருந்துகளிலும் இந்த பிரச்சார பைகளை தோளில் மட்டியபடி செல்பவர்களை மக்கள் எளிதாக கவனிக்கின்றனர். ஒரு காலத்தில் வீதிவீதியாக போஸ்டர் ஒட்டி கட்சிக்காக பிரச்சாரம் செய்த காலம் மாறி, இன்று பிரச்சாரத்திலும் புதிய யுத்தி கையாளப்படுகிறது. திமுகவினர் மட்டுமல்லாமல் திமுக அனுதாபிகளாக இருப்பவர்களும் இந்த வகை பிரச்சாரத்தில் தங்களை ஆர்வமுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.

புதுசு புதுசாக
தமிழக அரசியல் கட்சிகளிலேயே தேர்தலுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் புதுமையை அறிமுகப்படுத்தும் ஒரே கட்சி திமுக என்பது குறிப்பிடத்தக்கது. காலத்திற்கேற்ப அட்வான்ஸ் தொழில்நுட்பங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்து வாக்கு அறுவடை நடத்துவதில் திமுக எப்போதுமே அதிக கவனம் செலுத்தும். அந்த வகையில் இந்த தேர்தலிலும் டிஜிட்டல் பேக் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள்
இதனிடையே சமூக வலைதளங்கள் மூலமும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். திமுக ஐடி விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., பாஜக மற்றும் அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுடச்சுட அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதேபோல் மற்ற நிர்வாகிகளும் தேர்தலை ஒட்டி சற்று ஆக்டிவாக சமூக வலைதளப்பக்கங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications