எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி!
எந்தவித ஆட்சி மாற்றத்தையும் திமுகவால் கொண்டு வர முடியாமல் உள்ளது
Recommended Video
சென்னை: இனிப்பு சாப்பிட்டு கொண்டாடவும் முடியலை. கொண்டாடாமல் இருக்கவும் முடியலை. அப்படி ஒரு சிக்கலான பொசிஷனில் கொண்டு உட்கார வைத்திருக்கிறார்கள் மக்கள் திமுகவை.
நாடாளுமன்றத் தேர்தலில் அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது திமுக கூட்டணி. ஆனால் சட்டசபையில் ஆட்சியைக் கைப்பற்ற தவறி விட்டது. மறுபக்கம் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திமுகவால் எதையும் பெரிய அளவில் சாதிக்கமுடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது இரண்டும் கெட்டான் நிலை என்று சொல்வார்களே.. அந்த நிலையில் திமுக வந்திருக்கிறது. மக்களின் கருத்து திமுகவுக்கு சாதகமாகவே இருந்தாலும் கூட சூழல்கள் திமுகவுக்கு சாதகமாக அமையத் தவறி விட்டன.

பெரிய மகிழ்ச்சி
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை திமுக இந்த முறை 23 இடங்களில் போட்டியிட்டு அத்தனையிலும் வெற்றி பெறுகிறது. கூட்டணிக்குக் கிடைத்துள்ள இடங்கள் 37 ஆகும். இது அக்கட்சிக்கு பெரிய சந்தோஷம்தான்.

பெருத்த ஏமாற்றம்
ஆனால் இந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை. காரணம், பெரிதும் நம்பிய காங்கிரஸ் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பலத்தைப் பெறத் தவறி விட்டது. வட இந்திய மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர். இது திமுகவுக்கும் பெரும் ஏமாற்றம்தான்.

ஆட்சி கவிழும் அபாயம்
மறுபக்கம் தமிழக சட்டசபையிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையை இந்த இடைத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு அதிக இடங்களில் அதாவது 13 இடங்களில் வெற்றி கிடைத்தும் கூட அதிமுகவும் 9 தொகுதிகளைப் பிடித்து விட்டது. இதனால் ஆட்சி கவிழும் அபாயம் நீங்கி விட்டது.

கசப்பான வெற்றி
இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக அமைந்த காரணத்தால் திமுகவால் தமிழகத்திலும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எதையும் செய்ய முடியாது. அதேபோல மத்தியிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நிலை. இது நிச்சயம் திமுகவுக்கு மிகப் பெரிய கசப்பான வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை.

அயர்ச்சி
எனவே திமுகவினரைப் பொறுத்தவரை தற்போதைய அதிமுக ஆட்சி முடியும் வரை பொறுத்திருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் அதாவது அடுத்த 2 ஆண்டுகளுக்குள் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற அயர்ச்சி மக்களுக்கும் வந்திருக்கிறது. பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications