எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த முறை சரியாக செயல்படாத எம்எல்ஏக்களுக்கு திமுகவில் இந்த முறை சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, எழும்பூரின் சிட்டிங் எம்எல்ஏவான பரந்தாமனுக்கு பதில், தமிழன் பிரசன்னாவுக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழகத்தின் கடைகோடி தொகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதியில், சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. அவரின் பத்மநாபபுரம் தொகுதி கூட்டணி கட்சியான சிபிஎம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

- தாம்பரம்: எஸ்.ஆர். ராஜாவுக்குப் பதில் டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அண்ணா நகர்: எம்.கே. மோகனுக்குப் பதில் நே. சிற்றரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
- எழும்பூர்: இ. பரந்தாமனுக்குப் பதில் தமிழன் பிரசன்னா அறிவிக்கப்பட்டுள்ளார்.
- தியாகராய நகர்: ஜெ. கருணாநிதிக்குப் பதில் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அம்பத்தூர்: ஜோசப் சாமுவேலுக்குப் பதில் டாக்டர் அ.பு. பூர்ணிமா அறிவிக்கப்பட்டுள்ளார்.
- ராயபுரம்: ஐடீம் ஆர்.மூர்த்திக்கு பதில் டாக்டர சுபேர்கான் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
- திரு.வி.க.நகர்: சிவகுமாருக்கு பதில், கே.எஸ்.ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்
- வில்லிவாக்கம்: வெற்றியழகனுக்கு பதில், கார்த்திக் மோகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்
- காஞ்சிபுரம்: சி.வி.எம்.பி. எழிலரசனுக்குப் பதில் நித்யா சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- ஸ்ரீரங்கம்: எம். பழனியாண்டிக்கு பதில் எஸ். துரைராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்
- திருப்பூர் தெற்கு: க. செல்வராஜ்க்கு பதில், என். தினேஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார்
- நாமக்கல்: பெ. ராமலிங்கத்திற்கு பதில் பி. ரமணி மாற்றப்பட்டுள்ளார். இப்படி பல தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தரப்பு அதிருப்தியில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications