வெளியான திமுக வேட்பாளர் லிஸ்ட்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி, கொளத்தூரில் ஸ்டாலின் போட்டி
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று பகல் 12.20 மணியளவில் வெளியானது. தமிழகத்தில் வேட்பு மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
Recommended Video
இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்யிடுகின்றனர்.
173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. நாளை திமுக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இன்று வேட்பாளர் பட்டியல் வெளியானது.

ஆசி பெற்ற ஸ்டாலின்
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததால் கடைசியாக தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிய உள்ளது. முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்தி உள்ளார் மு.க.ஸ்டாலின். மேலும் தாயார் தயாளு அம்மாளிடமும் ஸ்டாலின் ஆசி பெற்றுள்ளார்.
கொள்கை கூட்டணி
வேட்பாளர் பட்டியல் பகல் 12.30 மணிக்கு முன்பாக அண்ணா அறிவாலயத்திலிருந்து ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: திமுக அமைத்துள்ளது அரசியல் கூட்டணி கிடையாது. கொள்கை கூட்டணி. 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 61 தொகுதிகளில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளோம்.

கூட்டணிகள்
திமுக 173 தொகுதிகள், காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகள், மார்க்சிஸ்ட் 6, மதிமுக 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 6 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆறு தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு தொகுதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு தொகுதி, ஆதி தமிழர் பேரவை ஒரு தொகுதி, மக்கள் விடுதலை கட்சி ஒரு தொகுதி என்று எங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

உதய சூரியன்
இதில் கொங்குநாடு மக்கள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது. இவ்வாறு கூறி ஸ்டாலின் தனது வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார்.

எடப்பாடி தொகுதி
எடப்பாடியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடுகிறார் திமுக வேட்பாளர் சம்பத்குமார். கரூரில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.
இதன்படி, கரூர் தொகுதியில் விஜயபாஸ்கரை எதிர்கொள்கிறார் செந்தில் பாலாஜி. போடி தொகுதியில் ஓபிஎஸ்சை தங்கத் தமிழ்ச் செல்வன் எதிர்கொள்கிறார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டிருக்கிறார். கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

முழு லிஸ்ட்
- பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்,
- நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்,
- கன்னியாகுமரி - ஆஸ்டின்
- ராதாபுரம் - அப்பாவு,
- பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்,
- அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
- நெல்லை - லட்சுமணன்,
- ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
- திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்,
- தூத்துக்குடி - கீதா ஜீவன்
- முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்,
- பரமக்குடி - சே.முருகேசன்,
- திருச்சுழி - தங்கம் தென்னரசு
- அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,
- கம்பம் - ராமகிருஷ்ணன்
- போடி - தங்கதமிழ்ச்செல்வன்,
- ஆண்டிப்பட்டி - மகாராஜன்,
- திருமங்கலம் - மணிமாறன்
- மதுரை மேற்கு - சின்னம்மாள்,
- மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன்
- மதுரை வடக்கு - தளபதி,
- சோழவந்தான் - வெங்கடேஷன்
- திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்,
- ஆலங்குடி - மெய்யநாதன்,
- திருமயம் - எஸ்.ரகுபதி
- புதுக்கோட்டை - முத்துராஜா,
- விராலிமலை - பழனியப்பன்,
- பேராவூரணி - அசோக்குமார்
- பட்டுக்கோட்டை - அண்ணாதுரை,
- ஒரத்தநாடு - ராமச்சந்திரன்,
- தஞ்சை - நீலமேகம்
- திருவையாறு - துரை சந்திரசேகரன்,
- கும்பகோணம் - அன்பழகன்
- நன்னிலம் - ஜோதிராமன்,
- திருவாரூர் - கலைவாணன்,
- மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா
- வேதாரண்யம் - வேதரத்தினம்,
- பூம்புகார் - நிவேதா முருகன்,
- புவனகிரி - துரை சரவணன்
- குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
- நெய்வேலி - சபா ராஜேந்திரன்
- ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்,
- குன்னம் - சிவசங்கர்,
- பெரம்பூர் - பிரபாகரன்
- துறையூர் - ஸ்டாலின் குமார்,
- முசிறி - தியாகராஜன்,
- மணச்சநல்லூர் - கதிரவன்
- லால்குடி - சவுந்திரபாண்டியன்,
- திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்,
- திருச்சி மேற்கு - கே.என்.நேரு
- கரூர் - வி.செந்தில்பாலாஜி,
- அரவக்குறிச்சி - இளங்கோ,
- நத்தம் - ஆண்டி அம்பலம்
- ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி,
- பழனி - ஐபி செந்தில்குமார்,
- மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
- சிங்காநல்லூர் - கார்த்திக்,
- தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி,
- கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன்
- கோபிச்செட்டிபாளையம் - மணிமாறன்,
- பவானி - கே.பி.துரைராஜ்,
- காங்கேயம் - சாமிநாதன்
- தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்,
- மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
- பரமத்திவேலூர் - கேஎஸ் மூர்த்தி,
- ராசிபுரம் - மதிவேந்தன்,
- வீரபாண்டி - தருண்
- சேலம் தெற்கு - சரவணன்,
- சேலம் மேற்கு - ஆர்.ராஜேந்திரன்,
- சங்ககிரி - ராஜேஸ்,
- எடப்பாடி - சம்பத்குமார்
- மேட்டூர் - சீனிவாச பெருமாள்,
- ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்,
- ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்
- திருக்கோவிலூர் - பொன்முடி,
- விக்கிரவாண்டி - புகழேந்தி,
- விழுப்புரம் - லட்சுமணன்,
- திண்டிவனம் - சீத்தாபதி சொக்கலிங்கம்,
- மயிலம் - மாசிலாமணி,
- செஞ்சி - மஸ்தான்
- செய்யாறு - ஓ.ஜோதி,
- ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்,
- போளூர் - சேகரன்,
- கலசப்பக்கம் - சரவணன்
- கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி,
- திருவண்ணாமலை - எவ வேலு,
- செங்கம் - மு.பெ.கிரி
- பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார்,
- பென்னாகரம் - இன்பசேகரன்,
- பாலக்கோடு - முருகன்
- ஓசூர் - ஒய்.பிரகாஷ்,
- வேப்பனஹள்ளி - முருகன்,
- கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்,
- பர்கூர் - மதியழகன்
- திருப்பத்தூர் - நல்லதம்பி,
- ஜோலார்பேட்டை - தேவராஜு,
- ஆம்பூர் - வில்வநாதன்
- குடியாத்தம் - அமலு,
- அணைக்கட்டு - நந்தகுமார்,
- வேலூர் - கார்த்திகேயன்,
- ராணிப்பேட்டை - காந்தி
- உத்தரமேரூர் - சுந்தர்,
- செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்,
- தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா,
- காட்பாடி - துரைமுருகன்,
- சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்,
- ஆவடி - சா.மு.நாசர்
- திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்,
- மாதவரம் - சுதர்சனம்,
- அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்
- மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி,
- மயிலாப்பூர் - த.வேலு,
- சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்
- விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா,
- அண்ணா நகர் - மோகன்,
- சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
- எழும்பூர் - பரந்தாமன்,
- திருவிக நகர் - தாயகம் கவி,
- வில்லிவாக்கம் - வெற்றியழகன்
- பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,
- ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்,
- கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications