யாரு அந்த திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜாத்தி? வெளியான பட்டியலால் குழப்பம்.. இதுதான் விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் வெளியிட்ட ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலில் ராஜாத்தி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது குழப்பங்களை ஏற்படுத்தியது. திமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்றது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலர் கேள்வி எழுப்பினர்.

கடந்த மே 28ஆம் தேதியன்று திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவரான கமல்ஹாசனுக்கு ஒரு சீட் ஒதுக்கியது போக மூத்த வழக்கறிஞர் வில்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், எழுத்தாளர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

DMK Candidate Rajathi Name in Rajya Sabha List Sparks Confusion in Tamil Nadu

ராஜ்யசா வேட்பாளர்கள்

இந்நிலையில், ராஜ்ய சபா தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் செல்லத்தக்கவை மற்றும் நிராகரிக்கப்பட்டவை குறித்த அறிவிப்பை கடந்த ஜூன் 10ஆம் தேதி சட்டமன்ற பேரவை செயலகம் வெளியிட்டது. அதில் திமுக வேட்பாளர்களில் ராஜாத்தி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.

திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ரொக்கையா மாலிக் (எ) சல்மா என்று குறிப்பிட்டுவிட்டு தற்போது ராஜாத்தி என்று பெயரை மாற்றி இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். திமுக வேட்பாளர் பட்டியலில் ராஜாத்தி என்ற அவரது சான்றிதழ் பெயரை குறிப்பிடாததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற பேரவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன், 2025-இல் நடைபெறும் தேர்தலுக்காக வரப்பெற்ற வேட்பு மனுக்கள் 10 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆய்வுக்குப் பின் கீழ்க்கண்ட 6 வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்பெறுகிறது.
1 I.S. இன்பதுரை, அ.இ.அ.தி.மு.க.
2 கமல் ஹாசன், ம.நீ.ம.
3 எஸ்.ஆர். சிவலிங்கம், தி.மு.க.
4 ம. தனபால், அ.இ.அ.தி.மு.க.
5 ராஜாத்தி, தி.மு.க.
6 திபி.வில்சன், தி.மு.க.

கீழ்க்கண்ட 7 சுயேட்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

1 அக்னி ஆழ்வார்
2 கண்டே சயன்னா
3 ரெ.கந்தசாமி
4 மு. சுப்பிரமணியன்
5 டாக்டர் கு. பத்மராஜன்
6 து.கு. மேஷாக் கிருபாகரன்
7 கே.பி.எம். ராஜா

திமுக வேட்பாளர் பட்டியலில் ராஜாத்தி என்ற பெயரே இடம்பெறாத நிலையில், அரசு வெளியிட்ட பட்டியலில் ராஜாத்தி என்ற பெயர் இடம்பெற்றது குழப்பத்தை ஏற்படுத்தியது. திமுக, சல்மாவின் அதிகாரப்பூர்வ பெயரை வெளியிடாததால் இந்தக் குழப்பம் நேர்ந்துள்ளது.

யார் இந்த ராஜாத்தி @ சல்மா?

ராஜாத்தி @ ரொக்கையா பேகம் என்ற சல்மா, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தவர். இவர் தொண்ணூறுகளில் தொடங்கி கவிதைகள் எழுதி வருகிறார். 13 வயதில் தனது தோழிகளுடன் தியேட்டருக்குச் சென்று திரைப்படம் பார்த்த காரணத்தால் அவரது குடும்பத்தார் அவரை தொடர்ந்து பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இவரது படிப்பு பாதிக்கப்பட்டது.

பின்னர் அப்துல் மாலிக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அப்துல் மாலிக் திராவிட பாரம்பரியம் கொண்டவர். திருமணத்துக்குப் பின் தீவிரமாக கவிதைகள் எழுதத் தொடங்கினார் சல்மா. தொடர்ந்து, அரசியல் ஆர்வத்தால் மக்கள் பணி செய்யத் தொடங்கினார்.

அரசியல் களத்தில்

சல்மா பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்,

சல்மா, திமுகவில் மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராகப் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து தற்போது செய்தி தொடர்பு பிரிவு இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் ராஜாத்தி என்கிற சல்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+