ஒரு கூடை சன்லைட்.. ஒரு கூடை மூன்லைட்.. போதும்டா விடுடா.. தமிழச்சியை பூக்களால் மகிழ்வித்த சிறுவன்!
தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: ஒரு கூடை சன்லைட்.. ஒரு கூடை மூன்லைட்.. ஒன்றாக சேர்ந்தால்.. என்பது மாதிரி ஒருகூடை பூக்களை.. தமிழச்சி தங்கபாண்டியன் மீது அள்ளி அள்ளி வீசி மகிழ்ந்தான் ஒரு சிறுவன்!
தென்சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதற்காக தினமும் தொகுதியில் வளைத்து வளைத்து பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
செல்லும் இடமெல்லாம் தமிழச்சிக்கு தொகுதி மக்கள் வரவேற்பு அளிக்கவே செய்கிறார்கள். ஒருசிலர் தமிழச்சியை பார்த்ததும் தங்களது குறைகளை உரிமையாக எடுத்து சொல்லி தீர்க்குமாறு கேட்டு கொள்கிறார்கள்.

ஒப்புதல்
அப்படித்தான் ஒரு பகுதிக்குள் ஓட்டு கேட்க பிரச்சார வேனில் செல்கிறார் தமிழச்சி. வேன் ஒரு இடத்தில் நிற்கிறது. அந்த பகுதி மக்கள் தமிழச்சி வந்திருப்பதை அறிந்ததும், வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களிடம் தமிழச்சி வாக்கு கேட்க, அதற்கு பொதுமக்களுக்கும் சரியென்று ஒப்புதல் தந்து கொண்டிருந்தார்கள்.

ஓட்டு வீடு
அந்த சமயத்தில் தமிழச்சிக்கு நேர் எதிரே ஒரு ஓட்டு வீடு இருக்கிறது. அந்த ஓட்டின் மேல் ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறான். கையில் ஒரு கூடை நிறைய பூ இருக்கிறது. மற்றொரு கையில் செல்போன் வைத்திருக்கிறான்.

சிறுவன்
கூடையில் இருந்த பூக்களை அள்ளி அள்ளி தமிழச்சி மீது வீச ஆரம்பித்துவிட்டான். இதை பார்த்ததும் தமிழச்சிக்கு குஷி தாங்கல. வேண்டாம், பூ போடாதே என்று சைகை காட்டினாலும், அந்த சிறுவன் எதையுமே சட்டை செய்யவில்லை.
ரொம்ப கோபம்.. காங்கிரசின் முடிவால் கடுப்பான குஷ்பு.. இதுதான் காரணம்- வீடியோ

பொறுப்பு
வந்திருக்கும் வேட்பாளர் யார், எந்த கட்சி, என்றெல்லாம் அச்சிறுவனுக்கு தெரிய வாய்ப்பிருக்காது. அந்த பகுதியில் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் இந்த பையனிடம் பூ அள்ளி வீசும் பொறுப்பை தந்திருப்பார்கள் போல தெரிகிறது. தமிழச்சி அங்கிருந்து நகரும் வரை, நிறுத்தாமல் பூக்களை வீசிக் கொண்டே இருந்தான். மற்றொரு கையில் தன் செல்போனால் தமிழச்சியை வீடியோ எடுத்து கொண்டிருந்தான்.
கடைசியாக, தமிழச்சி கிளம்பி செல்லும்போது, "பாத்து, பத்திரமா கீழே இறங்கி வா" என்று செல்லமாக சொல்லிவிட்டு நகர்ந்தார்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications