ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான அரசியல் நிலையில் திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் திமுக களத்தில் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

திமுக நேர்காணல் தொடக்கம்
தேர்தலையொட்டி திமுகவில் 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கியது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்தார். இன்று தொடங்கி வருகிற 22 ஆம் தேதி வரை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (DMK Candidates Interview)
முதல்கட்டமாக புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. தொகுதி நிலவரம், திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்தும் நேர்காணலில் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளை மார்ச் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும், நாளை மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 22 வரை
நாளை மறுநாள் மார்ச் 19 ஆம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது. மார்ச் 20 ஆம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி காலை கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும், திருவள்ளூர், சென்னை, மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
-
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்! -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க -
அங்க மூணாவதா ஒருத்தன் இருப்பானே.. தம்பி மூலம் செந்தில் பாலாஜி செக்..விஜய பாஸ்கருக்கு ஷாக்












Click it and Unblock the Notifications