164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் களம் காணும் திமுக வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் இன்று வெளியிடுவார் என தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து முடிந்துவிட்டது.
அதன்படி திமுக- 164
காங்கிரஸ்- 28
தேமுதிக- 10
விசிக- 8
இந்திய கம்யூனிஸ்ட் - 5
மார்க்சிஸ்ட் - 5
மதிமுக- 4
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 2
மனிதநேய மக்கள் கட்சி- 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 2
மனிதநேய ஜனநாயக கட்சி- 1
எஸ்டிபிஐ- 1
முக்குலத்தோர் புலிப்படை- 1
தமிழர் தேசம் கட்சி- 1
மொத்தம் 234 தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்த 164 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து இன்று இறுதி செய்யப்பட்டுவிடும் என தெரிகிறது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிக பட்டியலை இன்று முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கவுள்ளார். அது போன்று திமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணிகளை முடித்த பின்னர், திருவாரூரில் இருந்து ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொதுக் கூட்டங்கள் மூலம் ஆதரவு திரட்டுகிறார்.
எனவே இன்று யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது தெரிந்துவிடும். அதை வைத்து அதிமுக, திமுக எந்தெந்த இடங்களில் கடும் போட்டியை சந்திக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications