திமுக வேட்பாளர்கள் பட்டியல்: டெல்டாவில் எகிறும் திமுக vs அதிமுக மோதல்.. இனி ரெஸ்ட்டே கிடையாது
சென்னை: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தமாக 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்பு பட்டியலை வெளியிட்டார். இதில், டெல்டா தொகுதிகளில் திமுக நிறுத்திய வேட்பாளர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
கும்பகோணம் - அன்பழகன்
வேதாரண்யம்- வேதரெத்தினம்
திருவாரூர் - பூண்டி கலைவாணன்
தஞ்சை - டி.கே.ஜீ. நீலமேகம்
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கரூர் - செந்தில் பாலாஜி
திருவையாறு - துரை சந்திரசேகர்
பட்டுக்கோட்டை - அண்ணாதுரை
பேராவூரணி - அசோக் குமார்
ஒரத்தநாடு - ராமச்சந்திரன்
பூம்புகார் - நிவேதா முருகன்
பெரம்பலூர் - பிரபாகரன்
புதுக்கோட்டை - முத்துராஜா
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
நன்னிலம் - ஜோதி ராமன்
ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், டி.ஆர்.பி ராஜா, ராமச்சந்திரன், அன்பில் மகேஷ், நீலமேகம், பூண்டி கலைவாணன் உள்ளிட்ட பலருக்கும் மீண்டும் அதே தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேருக்கு நேர் மோதல்
குறிப்பாக, பல இடங்களில் அதிமுக, திமுக நேருக்கு நேர் மல்லுக்கட்டுகின்றன. ஒரத்தநாட்டில், கடந்த முறை தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் இம்முறை அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அங்கு தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பது திமுகவின் ராமச்சந்திரன். இவருக்கு தான் இப்போது மீண்டும் திமுக சீட் வழங்கியுள்ளது.

உட்கட்சி பூசல்
அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜாவுக்கு மன்னார்குடி தொகுதி மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் தான் அங்கும் சிட்டிங் எம்.எல்.ஏவும் கூட. ஆனால், அங்கு உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் ராஜாவுக்கே சீட் கொடுத்திருப்பதை நாம் காண முடிகிறது.

அதிமுகவினர் சோகம்
கும்பகோணத்தை பொறுத்தவரை அதே 'சாக்கோட்டை' அன்பழகனுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக சார்பில் வேறு எவருக்கும் வாய்ப்பே கிடைக்காது என்பது வேறு விஷயம். கும்பகோணத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் சாக்கோட்டை அன்பழகனும் சீட் கொடுத்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏறக்குறைய இவருக்கே இங்கு வெற்றி என்பதை அதிமுகவினரே முணுமுணுப்பதை நாம் காண முடிகிறது.

மீண்டும் சிட்டிங் எம்.எல்.ஏ
திருவையாறில் மீண்டும் துரை சந்திரசேகர் களம் காண்கிறார். 89ல் சிவாஜி கணேசனை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் தான் துரை சந்திரசேகர். இங்கு அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதால், சந்திரசேகருக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

கடும் மோதல்
திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு அதிமுக சார்பாக போட்டியிடுவது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார். ஸோ, இங்கு திமுக vs அதிமுக மோதல் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக உள்ள நீலமேகத்திற்கு மீண்டும் இம்முறை சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அதிமுக சார்பில் அறிவுடைநம்பி களமிறக்கப்பட்டுள்ளார். ஆகையால், இங்கும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் டெல்டா பகுதி திமுக vs அதிமுகவாக உருவெடுத்துள்ளது.
-
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications