Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு! திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நீதி நிலைநாட்டப்பட்டது என தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Pollachi sexual assault case

இந்த நிலையில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் தான் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று தீர்ப்பளித்திருந்தார். அவர்களுக்கு பகல் 12 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.

குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் தங்கள் வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டனர். இந்த நிலையில் தற்போது அந்த 9 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Pollachi sexual assault case

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக ரூ 85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை பலர் வரவேற்றுள்ளனர். பொள்ளாச்சியில் பேருந்து நிலையம் முன்பு நகர திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இந்த தீர்ப்பை வரவேற்கும் பொருட்டு பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் ஆனைமலை நகர திமுக கட்சியின் செயலாளர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் துணைச் செயலாளர் அபுதாகிர் முன்னிலையில் திமுக மகளிர் அணியினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த தீர்ப்பை வரவேற்று விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

Pollachi sexual assault case

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.

எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும்

பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+