9 மேயர் பதவிகளை அள்ள முடிவு.. முக்கிய வாரிசுகளுக்கு செம லக்.. திமுக கட்சியின் மாஸ்டர் பிளான்!

உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்று, அதிக மாநகராட்சி பதவிகளை பெறுவதற்கு திமுக கட்சி திட்டமிட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்று, அதிக மாநகராட்சி பதவிகளை பெறுவதற்கு திமுக கட்சி திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது.

தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

இது தொடர்பாக இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். லோக்சபா தேர்தல் போல உறுப்பினர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். முக்கிய தலைவர்கள் எல்லோரும் களமிறங்கி உள்ளாட்சி தேர்தலுக்காக உழைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உழைப்பு

உழைப்பு

அதன்படி தமிழகம் முழுக்க திமுக எம்பிக்கள்தான் 38 பேர் இருக்கிறார்கள். அதுபோக 90+ எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நேரடியாக களமிறங்கி உள்ளாட்சி தேர்தலுக்காக உழைக்க வேண்டும். எல்லோரும் வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி மன்ற தலைவர்களை மாவட்ட செயளாலர்களே தேர்வு செய்ய ஸ்டாலின் வாய்ப்பு வழங்கி உள்ளார். ஊருக்குள் அதிக செல்வாக்கு கொண்ட நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நகராட்சியிலும் வலுவான திமுக உறுப்பினர்களை போட்டியிட வைக்க வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளது.

15ல் எத்தனை

15ல் எத்தனை

மேலும் தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 15 மாநகராட்சிகள் உள்ளன. இதனால் 15 மேயர் பதவிகள் உள்ளது. இதில் தென் மாநிலங்களிலும், டெல்டாவிலும், சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் மேயர் பதவியை கைப்பற்ற திமுக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

9 மேயர் பதவி

9 மேயர் பதவி

திமுகவின் திட்டப்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், ஆவடி ஆகிய மேயர் பதிவுகளை கண்டிப்பாக வெல்ல வேண்டும். மற்ற இடங்களில் வென்றால் சிறப்பு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு மேயர் பதவி கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

கொங்கு

கொங்கு

திமுக அவ்வளவு வலுவாக இல்லாத கொங்கு மாவட்ட மேயர் பதவிகள், வடமாவட்ட மேயர் பதவிகளை இந்தமுறை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கவும் திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2-3 மேயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

அதோடு நாளை திமுக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. எல்லா மாவட்ட செயலாளர்களும் இதற்காக ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர். இவர்களிடம் நாளை உள்ளாட்சி தேர்தல் குறித்து ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+