விருப்பமான முதல்வர்.. அதிலும் ஸ்டாலின் 'டாப்' - இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், விருப்பமான தமிழக முதல்வர் பட்டியலில் யார் முதலிடம் பிடித்துள்ளது தெரியுமா?
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் முதல் முடிவடைந்தது. இதில், 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும்.
கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், வாக்குகள் குறைவாகவே பதிவாகின. வெயில், கொரோனா பரவல் உள்ளிட்ட பல காரணிகள் வாக்கு சரிவுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டன.

எக்ஸிட் போல் முடிவுகள்
இந்த நிலையில், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று ஜரூராக வெளியாகின. இதில், பெருவாரியான கருத்துக்கணிப்புகளில், தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக அரியணையில் ஏறும் என்பதே கருத்துக்கணிப்புகளின் ரிசல்ட்டாக உள்ளது.

பல்வேறு தடைகள்
கமல்ஹாசன் சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி, தென் மண்டலங்களில் கடும் சவால் அளிக்க காத்திருந்த டிடிவி தினகரன் என பல்வேறு தடைகள் திமுகவுக்கு இருந்தன. இவர்களின் எழுச்சி திமுகவின் வாக்குகளை பிரிக்குமா? அதிமுக வாக்குகளை பிரிக்குமா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

நாங்கள் நம்பமாட்டோம்
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளதால், அக்கட்சியின் தலைமை சற்று நிம்மதியடைந்துள்ளது. அதேசமயம், அதிமுக தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நாங்கள் நம்புவதில்லை என்று அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் முதலிடம்
இந்த சூழலில், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மக்கள் விரும்பும் முதல்வர் யார் என்ற முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், 46 சதவிகிதம் பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி 34 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 4 சதவிகி வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications