ஒரு கிலோ மீட்டர்.. முதல்வர் தொகுதியில் அசராமல் நடந்த ஸ்டாலின்.. சப்போர்ட்டுக்கு சிங்கிள் 'டீ'
சென்னை: எடப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமாருக்கு ஆதரவாக ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழக தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு் வருகின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றினர்.

இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அவர் நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை பரப்புரைக்காக சேலம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து செவ்வாய்பேட்டை பகுதியிலும், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினியை ஆதரித்து தலைவாசல் பகுதியிலும் நடந்து சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications