2026 தேர்தலில் கனிமொழிக்கு ப்ரீஹேண்ட்! 17-க்கும் அவர் வச்சதுதான்..! ஸ்டாலின் தலையிடவே மாட்டாராம்!
சென்னை: திமுக எம்பியும் துணை பொதுச் செயலாளருமான கனிமொழிக்கு முதல்வர் ஸ்டாலினும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஃப்ரீ ஹேண்ட் கொடுத்திருக்கிறாராம். அப்படி என்னதான் அது என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் வருகிறது. இந்த தேர்தலில் திமுக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. ஆனால் அதிமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் எப்படியாவது திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிவிட வேண்டும் என பார்க்கின்றன.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கஞ்சா அதிகம் கிடைக்கிறது, மெத்தபெட்டமைன் நடமாட்டமும் இருக்கிறது, விலைவாசி உயர்வு, ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன் வைக்கிறார்கள்.
எல்லாவற்றையும் விட திமுக சொன்ன தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முக்கியமானது. ஆனால் திமுகவோ தாங்கள் சொன்ன வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றிவிட்டதாக தெரிவிக்கிறார்கள்.
இப்படி திமுக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நிறைய விஷயங்களை கையில் வைத்துக் கொண்டு அதை பிரச்சாரங்களில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளன. இந்த நிலையில்தான் ஸ்டாலின் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்களின் தேர்வும் அவசியம். திமுக வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 170 முதல் 180 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. மீதமுள்ள இடங்கள் கூட்டணி கட்சிக்காக ஒதுக்கப்படும்.
இந்த நிலையில்தான் வேட்பாளர் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்டாலின் ஒரு புதிய விஷயத்தை கொண்டு வந்துள்ளார். அதாவது தென் மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கனிமொழியே தேர்வு செய்துக் கொள்ளலாம்.
அதில் ஸ்டாலின் தலையீடு இருக்காதாம். அதாவது தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களுக்குள்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வை கனிமொழியே செய்து கொள்ளலாம்.
அதாவது தூத்துக்குடியில் விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. அது போல் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
திருநெல்வேலியை எடுத்துக் கொண்டால், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளும் உள்ளன. கன்னியாகுமரியை எடுத்துக் கொண்டால் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மேற்கண்ட 4 மாவட்டங்களில் 22 சட்டசபை தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பது போக மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கனிமொழியே தேர்வு செய்வார் என்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நிலவரப்படி கன்னியாகுமரியில் 3 தொகுதிகளிலும் நெல்லையில் ஒரு தொகுதியிலும், தூத்துக்குடியில் ஒரு தொகுதியிலும் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அப்படி பார்த்தால் 22 தொகுதிகளில் 5 தொகுதிகள் போனால் மீதமுள்ள 17 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை கனிமொழிதான் தேர்வு செய்ய வேண்டும்.
திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி பொறுப்பேற்றது முதல் கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி டெல்லியில் நாடாளுமன்றத்தை அலற வைத்து வரும் கனிமொழி, தற்போது திமுகவுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையும் செய்ய போகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின்தான் வேட்பாளர்களை தேர்வு செய்து வந்தார். தற்போது முக்கியத்துவம் வாய்ந்த அந்த 4 தென்மாவட்டங்களை கனிமொழியிடம் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். இதிலும் சரியாக செயல்பட்டு திமுக தலைமையின் பாராட்டுகளை பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் பூரித்து போகிறார்கள்.
-
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications