மே மாதம்தான் முக்கியம்.. முதல் ஆளாக களத்தில் குதித்த ஸ்டாலின்.. ஆக்சன் இன்னிங்ஸ் ஆரம்பம்!
மே மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
Recommended Video

சென்னை: மே மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
வருகின்ற மே மாதம் நாடு முழுக்க நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் முக்கியம்.
20 தொகுதிகளில் நடக்க உள்ள இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக, தமிழக அரசே கவிழ கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த தேர்தல் அதிக கவனம் பெற்று இருக்கிறது.

களமிறங்கிய ஸ்டாலின்
இந்த புத்தாண்டு தொடக்கத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின், இதற்காக தயாராகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கடந்த 3ம் தேதியே ஸ்டாலின் இதற்காக கிராம சபை கூட்டங்களை நடத்த தொடங்கிவிட்டார். ஏப்ரல் மாதம் வரை கிராமம் கிராமமாக சென்று ஸ்டாலின் மக்களை சந்தித்து பேச போகிறார்கள். ஏற்கனவே மூன்று கிராமங்களில் ஸ்டாலின் பேசிவிட்டார்.

எத்தனை கிராமம்
திமுக சார்பில் 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டத்தை கூட்டி, அந்த கூட்டம் நடக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இன்னும் சில நாட்களில் ஸ்டாலின் மட்டுமில்லாமல் திமுகவின் மற்ற முக்கிய தலைவர்களும் களத்தில் இறங்கி பேச போகிறார்கள். 3 கோடி பேரை சந்தித்து பேச இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஏன் முக்கியம்
தமிழகத்தில் இருக்கும் எந்த அரசியல் தலைவர்களும் இப்போது, இந்த அளவிற்கு தீவிரமாக களத்தில் இறங்கவில்லை. ஸ்டாலின் மட்டும் தான் தேர்தல் களத்தில் தீவிரமாக குதித்துள்ளார். சென்ற வருடம் முழுக்க மிதமாக அரசியல் செய்து கொண்டு இருந்த ஸ்டாலின், திமுக தலைவர் ஆன பின் அதிரடி காட்ட தொடங்கி உள்ளார்.

ஸ்டாலினின் குறி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 30 தொகுதி வரை வெல்ல வேண்டும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதியையும் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரச்சாரத்தில் ஸ்டாலின் இறங்கி இருப்பதாக தகவல் வருகிறது. 20 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 20லும் திமுக வென்றால் மட்டுமே திமுக பெரும்பான்மை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications