பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்திலிருந்து பறந்த வாழ்த்து.. ஜன் சுராஜின் முதல் வெற்றியை வரவேற்ற ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் கோட்டையைத் தகர்த்து வெற்றி பெற்றுள்ள ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாங்கிபூர் தொகுதியில் பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். பிறகு அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

DMK Chief Stalin Congratulates Prashant Kishor on Historic Bankipur Bypoll Victory

பாங்கிபூர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 19,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாங்கிபூர் தொகுதி பாஜக தொடர்ந்து 9 முறை வென்ற தொகுதி. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இங்கு 5 முறை போட்டியிட்டு வென்றிருந்தார். இந்நிலையில், பாஜகவின் எஃகு கோட்டையாகத் திகழ்ந்த பாங்கிபூரில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டாலும், அக்கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் பாங்கிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோருக்கு திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோருக்கு, பாங்கிபூர் இடைத்தேர்தலில் அவர் பெற்ற சிறப்பான வெற்றிக்கும், அதன் மூலம் 'ஜன் சுராஜ்' தனது முதல் தேர்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளதற்கும் வாழ்த்துகள். பாங்கிபூர் தொகுதி மற்றும் பீகார் மாநில மக்களுக்குச் சேவை செய்வதில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை ஆற்றியுள்ள பிரசாந்த் கிஷோர், 2021 சட்டசபை தேர்தலின்போது திமுகவுக்கு தேர்தல் வியூக நிபுணராகப் பணிபுரிந்தார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+