இப்படி செய்திருக்க கூடாது.. இது பெரிய துரோகம்.. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்
Recommended Video
சென்னை: காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இது மட்டுமில்லாமல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் அவையில் இதற்கு எதிராக பேசினார்கள்.
சென்னையில் பேட்டி அளித்த ஸ்டாலின், ஜம்மு காஷ்மீரை பிரிப்பது கண்டனத்துக்குரியது. 370-வது பிரிவு நீக்கம் மக்களுக்கு எதிரானது. அம்மாநில மக்களை கேட்காமல் நாம் இது போன்ற பெரிய முடிவை எடுக்க கூடாது. அம்மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் இது. இன்று ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.
முதலில் காஷ்மீரில் முறையாக தேர்தல் நடத்த வேண்டும். அங்கு தேர்தல் நடத்தி சட்டசபையை கூட்ட வேண்டும். அவர்கள் மாநில எம்எல்ஏக்கள்தான் இந்த சட்டம் குறித்து முடிவு எடுக்க வேண்டும். அதை நீக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது.
இதற்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுக இதற்கு ஆதரவு அளித்துள்ளதன் மூலம் மிக மோசமான உதாரணமாக மாறி உள்ளது. அதிமுக என்பதற்கு பதிலாக அவர்கள் தங்கள் கட்சியை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று மாற்றிக்கொள்ளலாம், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications