“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி!
சென்னை: வயது முதிர்வு காரணமாக, மூத்த அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு இந்த முறை சீட் மறுக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், துரைமுருகன் காட்பாடி தொகுதியில், மீண்டும் போட்டியிடுகிறார். துரைமுருகனுக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அது துரைமுருகனின் கோட்டை என்றே சொல்லலாம். நீண்ட ஆண்டுகளாக அந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் துரைமுருகன். காட்பாடியில், 8வது முறையாக துரைமுருகன் எம்.எல்.ஏவாக உள்ளார். மொத்தமாக 10 முறை எம்.எல்.ஏவாக வென்றுள்ளார்.

1971 ஆம் ஆண்டில் முதல் முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் துரைமுருகன். 1977 மற்றும் 1980 தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984 மற்றும் 1991 தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் துரைமுருகன். கடந்த 1996 முதல் தொடர்ச்சியாக 6 முறை காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக, அவருக்கு வரும் சட்டசபை தேர்தலில், சீட் மறுக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட நான்கு பேரிடம் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி நேர்காணல் நடத்தினார். துரைமுருகன் திமுகவில் மொத்தமாக இதுவரை 10 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
வரும் தேர்தலில் சீனியர்கள் பலருக்கும் சீட் கிடைக்காது என கூறப்படுவதால் அமைச்சர் துரைமுருகனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. 2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து துரைமுருகனுக்கு பலமுறை உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் ஒரு இளைஞரை நிறுத்த திமுக தலைமை முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார் துரைமுருகன். காட்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார் துரைமுருகன். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் துரைமுருகன் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
வாயை விட்ட ஆ.ராசா! சர்ச்சையான ட்வீட்! கொந்தளித்த தவெகவினர்.. மதுரை போலீசில் புகார்! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்!












Click it and Unblock the Notifications