டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. பிரதமர் யார்? இந்தியா கூட்டணி தலைவர்களுடன் அவசர ஆலோசனை!
சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். தமிழ்நாடு - புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளைக் கைப்பற்றிய ஸ்டாலின், இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் நான்காம் தேதியான நேற்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

நாடு முழுவதும் பாஜக 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முழு தொகுதிகளை கைப்பற்றினாலும் உத்தர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதற்கு நன்றி சொல்லும் வகையில் சென்னையில் உள்ள தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்றனர். அதற்கு மக்கள் வாக்குகள் மூலமாக பதிலடி கொடுத்துவிட்டனர் எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2019 தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்தத் தேர்தலில் 40- 40ஐ தமிழக மக்கள் கொடுத்துவிட்டனர். பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலைகள் உள்ளது என்பதை இது காட்டுகிறது." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில் டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றார். தொடர்ந்து, பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு என் உயரம் எனக்கு தெரியும் என்றார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 5, 2024) காலை விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் அந்த கூட்டணி தான் முழுமையாக அனைத்து தொகுதிகளையும் ஸ்வீப் செய்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே அபார வெற்றி பெற்றுள்ளனர். 2004ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இன்று மாலை காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications