இதுதான் வெற்றி சீக்ரெட்.. ஸ்டாலின் பேசியதில் இதில் கவனிச்சீங்களா? திமுக களமிறக்கும் பார்முலா!
சென்னை: தமிழ்நாடு அரசியலில் திமுகவிற்கு கைகொடுத்த வெற்றிபார்முலாவை அந்த கட்சி மீண்டும் கையில் எடுத்துள்ளதோ என்று தோன்றுகிறது. திமுகவிற்கு சாதகமாக அமையும் பார்முலாவை அந்த கட்சி கையில் எடுத்துள்ளதோ என்ற சந்தேகம் முதல்வர் ஸ்டாலினின் பேச்சில் இருந்து எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி - சென்னை, விழுப்புரம் மண்டல மாநாடு" இன்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை, விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த 49 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற இந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கான கள ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.
திராவிட மாடல்: அதிவேக இன்ஜின்
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுகவின் 'திராவிட மாடல்' ஆட்சியை ஒரு "சூப்பர் பாஸ்ட் இன்ஜின்" உடன் ஒப்பிட்டார். பொதுவாக திமுகவிற்கு அதிமுகவை எதிர்ப்பதை விட டெல்லி பாஜகவை எதிர்ப்பது பெரிய பலன் கொடுத்துள்ளது.
நேரடியாக பாசிசம் மீது அட்டாக், பாஜக கொள்கைகள் மீது அட்டாக், தமிழ்நாடு vs டெல்லி என்ற நர்ரேட்டிவ் உருவாக்குவது திமுகவிற்கு உதவி உள்ளது. அதிமுக - திமுக என்று மோதல் தமிழ்நாடு பிரச்சனைகளை முன்னிறுத்தும் என்பதால் ஆளும் திமுக பாஜகவை அட்டாக் செய்ய தொடங்கி உள்ளது. இதைத்தான் நேற்று முதல்வரும் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.
"நாம் ஆட்சிக்கு வர வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று சொல்கிறோம். அதேபோன்று, ஆட்சிக்கு யார் வரக் கூடாது என்பதையும் மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலில் தி.மு.க.வை தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சர்வநிச்சயமாக டெல்லி பா.ஜ.க ஆட்சியாகத்தான் இருக்கும் என்று தெள்ளத் தெளிவாகப் புரிய வையுங்கள்!
நமது திராவிட மாடல் ஆட்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதிவேக இன்ஜின் போன்றது. இது யாரையும் சார்ந்து இருக்காத, யாருக்கும் அடிபணியாத வலிமையான இன்ஜின். ஆனால், பாஜகவின் 'டப்பா இன்ஜின்' (Tapa Engine) அதற்கு நேர்மாறானது," என்று அவர் சாடினார். அதாவது அதிமுகவை விட பாஜகவைத்தான் ஸ்டாலின் தாக்கினார்.
தொண்டர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
கட்சியின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் வாக்குச்சாவடி முகவர்களிடம் (Booth-level Agents) பேசிய முதல்வர், பின்வரும் முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார்:
மக்களுடன் தொடர்பு: அரசின் நலத்திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும்.
களப்பணி: அடிமட்ட அளவில் கட்சியின் வலையமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
மக்கள் நலன்: திமுகவின் ஆட்சி எப்போதும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தையே வழங்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
அரசியல் முக்கியத்துவம்
மத்திய அரசின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும், திமுக ஒரு வலுவான மாநில சக்தியாகத் திகழ்வதை இந்த உரை உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்தத் திருவிடந்தை கூட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு, திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முற்போக்கான, வேகமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியைத் தொடருவோம் என்ற நம்பிக்கையை அவர் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
-
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி












Click it and Unblock the Notifications