அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திமுக கண்டனம்... தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.அறிக்கை
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுபவித்த மிசா தண்டனை பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்திருந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாஃபா பாண்டியராஜன் தியாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அரசியல் வியாபாரி எனவும் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அபாண்டம்
தமிழக அமைச்சரவையில் தானும் ஒட்டிக் கொண்டு இருக்கின்றோம் என்ற இறுமாப்பு தலைக்கேறி ஒரு கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல், தான் வகிக்கின்ற அரசுப் பொறுப்புக்களை எல்லாம் துச்சமென தூக்கியெறிந்து விட்டு, உண்மைக்குப் புறம்பான, எந்த ஆதாரமும் இல்லாத அபாண்டத்தை போகிற போக்கில் அள்ளி வீசியுள்ளார்.

கொச்சைப்படுத்தி
தியாக வரலாற்றில் சேற்றினை வாரி இறைக்கும் விதமாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் அனுபவித்த மிசா கொடுமையினை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்திருக்கின்றார் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன். அரசியல் என்பதே வியாபாரம் என்றும் அதில் தான் இருக்கும் ஒவ்வொரு நாளும் என்ன லாபம் என்று கணக்குப் போடும் பாண்டியராஜனின் கடந்த காலம் போன்றதல்ல தலைவர் தளபதியாரின் வரலாறு.

அதிமுக கொள்கை
முதலில் பாஜகவில் இணைந்து அடுத்து ஓராண்டிலேயே தேமுதிகவுக்கு தாவி எம் எல் ஏ ஆகி... விஜயகாந்துக்கு துரோகமிழைத்து அதிமுக ஆதரவு அவதாரம் எடுத்து... சர்ச்சைகளில் சிக்கி எம் எல் ஏ ஆகி...ஜெயலலிதா இறந்த பிறகு ஓபிஎஸ்ஸோடு சென்று... பிறகு எடப்பாடியோடு ஐக்கியமாகி... அமைச்சராகி... அதிமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அங்கிருந்துகொண்டே பேசுகிறார்.

வாய் கூசாமல்
தான் பெற்ற பதவியை தக்க வைத்துக் கொள்ள அவர் பிறரை வேண்டுமென்றே எவ்வளவு வேண்டுமானுலும் புகழட்டும். ஆனால், "கீழடிப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு அல்ல, அது பாரதப் பண்பாடு" என்று வாய்க் கூசாமல் திரித்துச் சொல்லும் பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் என்பதே தமிழ்நாட்டுக்கு தலைக்குனிவு.

தூங்கும் புலிகள்
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களை உசுப்புவது, தூங்குகின்ற புலியை இடறுவதற்கு சமம் என்பதை உணர்ந்து வாய்த்துடுக்கை அடக்கி பாண்டியராஜன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications