இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறா? இந்துத்துவாவின் கோர முகம்! இளையராஜாவிற்காக களமிறங்கிய திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இளையராஜா தடுக்கப்பட்ட விவகாரம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திமுக சார்பாக இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் வைத்துள்ள விமர்சனத்தில், இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறா? இந்துத்துவாவின் கோர முகம்! இங்கே திறமை முக்கியம் அல்ல, ஜாதியை மட்டுமே கொண்டாடுகிறார்கள், என்று விமர்சனத்தில் கூறி உள்ளார்.

ilayaraja

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறி உள்ளார்.

அதன்படி அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கே இருந்தபடியே வழிபாடு செய்துள்ளார். அதன்பின் அங்கிருந்து வெளியேறி உள்ளார். கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட ஜாதியில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள் முறையிட்டு உள்ளனர்.

அவர் உள்ளே செல்ல முடியாது. எப்படி செல்லலாம். அவரை எல்லாம் உள்ளே அனுமதிக்க கூடாது என்று ஜீயர்கள் கோஷம் போட்டுள்ளனர். அதோடு அவரை வெளியே செல்லும்படி கூறிய ஜீயர்கள் அங்கேயே முறையிட்டு உள்ளனர். பின் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார் இளையராஜா. கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேகவேகமாக அங்கிருந்து கிளம்பி சென்றார்.

முன்னதாக அவர் கிளம்பும் முன் கோவில் நிர்வாகிகள்.. கோவில் விதிப்படி நீங்கள் உள்ளே செல்ல முடியாது. அந்த படி வரை மட்டுமே செல்ல முடியும். அதை தாண்டி செல்ல முடியாது. அதற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தனர்.

கடும் விமர்சனம்: இது நவீன தீண்டாமை. அவர் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சரிக்கு சமம் கிடையாது. அவரிடம் ஜாதி பாகுபாடு காட்டப்படுகிறது என்று நெட்டிசன்கள், ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளனர். ஜாதியை வைத்து ஒருவர் தனது கடவுளை வழிபடவே இங்கே கடமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தவறு என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இளையராஜா மிக தீவிர இந்து மத ஆதராவாளர். தீவிர பக்திமான். அவருக்கே நேர்ந்த இது போன்ற அவமதிப்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

கோவில் ஏன் பிரபலம்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பிரபலமானது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார் மற்றும் அவரது வளர்ப்பு மகளான ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்களின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது. இக்கோயில் மதுரையிலிருந்து 80 கி.மீ. பழங்கால திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆகும்.

கிபி 6-9 ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார் மகான்களின் ஆரம்பகால இடைக்கால தமிழ் நியதியான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இந்த கோவில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டாளின் வாழ்க்கையுடன் நெருக்கமாக இக்கோயில் தொடர்புடையது. கோயிலின் பிரதான தெய்வத்தின் அருளால் ஆண்டாளுக்கு இங்குதான் மாலை கிடைத்ததாக வரலாறு உண்டு. அதாவது விஷ்ணுவிற்கு அணிவிக்க வேண்டிய மாலையை முதலில் ஆண்டாள் இங்கே அணிந்ததாக புராணம் கூறுகிறது. அதன்பின் விஷ்ணு பெரியாழ்வார் அவரது கனவில் தோன்றி, ஆண்டாள் அணிந்திருந்த மாலையை தனக்கு தினமும் அர்ப்பணிக்கும்படி கேட்டதாக நம்பப்படுகிறது, இது நவீன காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் ரங்கநாதர் ஆண்டாள் என்பவரை மணந்ததாகவும், பின்னர் அவருடன் இணைந்ததாகவும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+