“பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்துங்கள்”.. பிரதமர் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு!
சென்னை: பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. பிரதமரின் பேச்சுக்கு திமுக முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பொது சிவில் சட்டம் (UCC) மற்றும் முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம்களை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார்.

"பொது சிவில் சட்டத்தை முன்வைத்து மக்களை தூண்டி விடுகின்றனர். ஒரு நாடு எவ்வாறு இரண்டு சட்டங்களால் இயங்க முடியும்? அரசியல் சாசனம், பொது சிவில் சட்டம் குறித்தும், சம உரிமை குறித்தும் பேசுகிறது. உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. ஆனால்,எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்" எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
மேலும், இந்த அரசியல் கட்சிகள் உங்களைத் தூண்டிவிட்டு, அழித்து ஆதாயம் தேட முயல்கின்றன என்பதை இந்தியாவின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் தங்களைத் தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யப்போவதை உறுதிப்படுத்துவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு தி.மு.கவின் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிகேஎஸ் இளங்கோவன், "பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும். இந்த நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்துச் சாதியினரும், இந்தியாவில் உள்ள எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மதத்துக்கும் பாதுகாப்பளிக்கிறது அரசியலமைப்புச் சட்டம். அதனால்தான் நாங்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார் டிகேஎஸ் இளங்கோவன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications