காங்கிரஸ் தலைமை முடிவு அதுதான்..தனிநபர் கருத்து முக்கியம் இல்லை..சூசகமாக பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதியானது என்பதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சூசகமாக பதிவிட்டுள்ளார். தனிநபர்களின் கருத்தை விடவும் கட்சியே மிகப்பெரியது என்று பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கட்சித் தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சியில் 20 சதவிகித இடம் என்று மிகப்பெரிய டிமாண்ட்டை முன் வைத்துள்ளது. ஆனால் திமுக தரப்பில் 29 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்ற அளவில் இறங்கி வந்துள்ளது.

ஆனால் திமுகவின் இந்த ஆஃபருக்கே அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால் களத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியின் மெசேஜை ஸ்டாலினிடமும், ஸ்டாலினின் ஆஃபரை ராகுல் காந்தியிடமும் ப.சிதம்பரம் கூறிவிட்டார். இதன்பின் நேற்றிரவு செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷய பிரியாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றைய தினமே வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில், திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சூசகமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் மாணிக்கம் தாகூர், தனிநபர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் அதனைவிடவும் கட்சியே மிகப்பெரியது. காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நமது ஒற்றுமையாக நமது மிகப்பெரிய பலம் என்று பதிவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications