கைய குடுங்க..இனிமே நாம ப்ரண்ட்ஸ்! திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதி! ராகுலிடம் ப.சி சொன்ன ஒத்த வார்த்தை
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் திமுக கூட்டணி கிட்டத்தட்ட உடையும் நிலைக்கு வந்த நிலையில் அதனை ஒட்ட வைத்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம். 28 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் என்ற திமுகவின் ஆஃபரை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெற்றுக் கொள்ளலாம் என ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமைக்கு ஆலோசனை சொன்னதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து கூட்டணிக்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில் சுமார் 40 தொகுதிகள், மேலும் இரு ராஜ்யசபா எம்பி சீட் வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கும் கோரியதாக கூறப்பட்டது. அதேவேளை, திமுக கடந்த தேர்தலில் அளித்த தொகுதி எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு குறைவான 28 இடங்களையே வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இந்த முரண்பாடே கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கியது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற ஆலோசனை அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை கூட்டணி விவகாரங்களில் தலையிடாத காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் திடீரென களமிறங்கியுள்ளார். இந்த ஆலோசனையில் ப.சிதம்பரத்துடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் கலந்து கொண்டார். திமுக தரப்பில் எம்.பி. கனிமொழிவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், இரு தரப்பினரும் தங்களது கோரிகைகளைத் தெளிவாக முன்வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத போதிலும், திமுக தரப்பில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் இரண்டு ராஜ்யசபா இடங்கள் வழங்கும் ஆஃபர் முன் வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இது ஆரம்பத்தில் பேசப்பட்ட 25 தொகுதிகளை விட அதிகமானதாக கருதப்படுகிறது.
காங்கிரஸ் தலைமை
எனினும், இறுதி முடிவை டெல்லி காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும் என தகவல்கள் சொல்கின்றனர். அவர் பேச்சுவார்த்தை விவரங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியிடம் தெரிவிப்பார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துன. இதனால் கூட்டணி தொடரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ப சிதம்பரம் ஆலோசனை
இந்த நிலையில் பா சிதம்பரத்தின் தொடர் பேச்சு வார்த்தைகளுக்கு பலன் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடரும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். 2026 சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்க திமுக முன் வந்த நிலையில் அந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளலாம் என சிதம்பரம் ராகுல் காந்தி இடம் தொலைபேசி மூலம் சொன்னதாக சொல்லப்படுகிறது.
28+1 ஒப்பந்தம்
மேலும் தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழல் காங்கிரஸின் பலம் திமுக ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என பல விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தியிடம் சிதம்பரம் தெளிவாக எடுத்துரைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ராஜ்ய சபா சீட் கிடைக்கும் நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிடம் வேண்டும் அளவுக்கு உரிய பங்கீட்டை பெற்று தரலாம், அதற்கு நான் பொறுப்பு என உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து திமுகவின் 28 + 1 என்ற டீலுக்கு ஓகே சொன்னார் ராகுல் காந்தி என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications