ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒரு அறிக்கையாவது விஜய் வெளியிட்டுள்ளாரா? காங்கிரஸ் கட்சிக்கு ஷாநவாஸ் கேள்வி
சென்னை: விஜய்யை கூட்டணிக்கான வாய்ப்பாக காங்கிரஸ் கட்சியினர் பார்த்தால், அது அவர்களுக்கு சரிவை கொடுக்கும் என்று விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். கொள்கையற்ற பேர அரசியலை முன்னெடுத்தால், அது முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தும் என்று கூறிய ஷாநவாஸ், ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒரு அறிக்கையையாவது விஜய் வெளியிட்டுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக கூட்டணி இணக்கமாக இருந்து வருகிறது. பீகார் தேர்தல் முடிவுகளுக்கு முன்பு வரை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலக உள்ளதாக பேசப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் விஜய்யுடன் சந்திப்பு நடத்திவிட்டு சென்றதாகவும் சொல்லப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் ராகுல் காந்த் விஜய்யை சந்தித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதேபோல் கடந்த சில மாதங்களாகவே திமுக ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேசி வந்ததோடு, கூடுதல் தொகுதிகளை கொடுக்கவில்லை என்றால், கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று முனுமுனுத்து வந்தனர்.
இப்படியான சூழலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். 2010ல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொறுப்புக்கு விஜய் வர விரும்பியதாக கார்த்தி சிதம்பரம் கூற, மறுமுனையில் ஜோதிமணி, விஜய் எங்களுக்கு புதியவர் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஜோதிமணி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கரூரில் தான் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அப்போது திமுகவுக்கு எதிராகவும், செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் தவெக பல்வேறு கதைகளை கிளப்பிவிட்டது. இந்த சம்பவம் நடந்த 50 நாட்களுக்குள் ஜோதிமணி விஜய்க்கு ஆதரவாக பேசுவது கூட்டணி கணக்குகளை முன் வைத்துதான் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜகவின் சதி வேலைகளை முறியடிக்க போராடும் ராகுல் காந்திக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் இதுவரை ஒருமுறையாவது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறாரா? SIR விவகாரத்தில் பாஜக மீது ஒரு குற்றச்சாட்டை கூட விஜய் முன் வைக்கவில்லை.
ஒருவேளை விஜய்யை கூட்டணி வாய்ப்பாக காங்கிரஸ் கட்சியினர் கருதினால் அது அவர்களுக்கு சரிவுதான்.. கொள்கையற்ற பேர அரசியலை முன்னெடுத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை உருவாக்கும். அதற்கு பாமகவின் இன்றைய சூழல் சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே விசிக தரப்பில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று அறிவித்தனர். தற்போது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடி இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம்











Click it and Unblock the Notifications