Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவர் கான்ஃபிடன்ஸ்..திமுகவை கடுப்பேற்றிய காங்கிரஸ்! 2வது ஆப்ஷனை காட்டியதும் மிரண்ட டெல்லி..என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில தினங்களாக கூட்டணி விவகாரத்தில் முரண்டு பிடித்து வந்த காங்கிரஸ் கட்சியால் கடும் கோபமடைந்த திமுக தலைமை அந்த கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டிவிடலாம் என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. டிடிவி, ராமதாஸ், ஓபிஎஸ் ஆகியோருடன் பேச்சு நடப்பதை தெரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது திமுகவுடன் சமாதானம் பேசியதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2019 முதல் வலிமையாக இருந்த திமுக கூட்டணியில் தற்போது சில சலசலப்புகள் எழத் தொடங்கி இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என சில கட்சிகள் பேசியதால் திமுக தலைமை கடும் கோபமடைந்ததாக சொல்லப்படுகிறது.

dmk congress mk stalin

குறிப்பாக திமுகவுடன் நீண்ட நாட்களாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கள் திமுக தலைமையை மேலும் கோபப்படுத்தி உள்ளது. மத்தியில் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த போது காங்கிரசுக்கு நெருக்கடியான நேரங்களில் தமிழகத்தில் திமுக தான் கை கொடுத்தது.

திமுக காங்கிரஸ் கூட்டணி

தொடர்ந்து கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. இதை அடுத்து 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தொடர்கிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என நெருக்கடி கொடுக்க தொடங்கியது காங்கிரஸ் தலைமை. பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் கூடுதல் தொகுதிகளை கேட்க முடியாத சூழல் உருவானது.

2026 தேர்தல்

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய போது திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க வேண்டும், இல்லையென்றால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என சில நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திமுகவுடன் தான் கூட்டணியில் தொடர வேண்டும் என சில நிர்வாகிகள் பேசினர். இது காங்கிரஸ் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பொதுவெளிகளில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் என பேச தொடங்கியதை திமுக தலைமை ரசிக்கவில்லை.

காங்கிரஸ் அழுத்தம்

தொடர்ந்து அதே கருத்து பேசுபொருளான நிலையில் கடும் கோபமடைந்த திமுக தலைமை காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட தயாராக இருந்ததாக சொல்லப்படுகிறது. தேசிய அளவிலான கட்சி என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் வைத்திருந்த நிலையில், தற்போது நெருக்கடி தருவதை விரும்பவில்லை.

திமுக தலைமை

அதே நேரத்தில் அந்த கட்சி சென்றால் ஒரு சில வாக்கு வங்கியில் பாதிக்கப்படும் குறிப்பாக சிறுபான்மையின வாக்குகள் பாதிக்கப்படும் என்பதால் அதனை சரி செய்ய தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வாங்கி வைத்திருக்கும் ஓ பன்னீர்செல்வம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகள் வலுவாக இருக்கும் டிடிவி தினகரன், வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவின் ராமதாஸ் தரப்பு ஆகியோரை கூட்டணியில் சேர்க்க சில அமைச்சர்கள் மூலம் பேசியதாக சொல்லப்படுகிறது.

திமுக தேர்தல் திட்டம்

மேலும் சாதி ரீதியாகவும் சில அமைப்புகளுடன் திமுக அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதை தெரிந்துகொண்ட டெல்லி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடைசி நேரத்தில் கூட்டணி பேரத்தை அதிகரிக்கலாம் என எதிர்பார்த்து தமிழக வெற்றிக் கழகத்தை காரணம் காட்டிய நிலையில் தங்களை கழட்டி விடும் முடிவுக்கு திமுக வந்திருப்பதை அறிந்த டெல்லி மேலிடம் திமுக எம்பியும், முக்கிய தலைவர்களில் ஒருவருமான டிஆர் பாலு மூலம் திமுக தலைவர் ஸ்டாலிடனிடம் பேசி சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 2026 தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தொடரும் என உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த தேர்தலை போல 25 தொகுதிகள் அல்லது அதற்கும் குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+