ஸ்டாலின் இல்லைன்னா இந்தியா கூட்டணி இல்லைங்க.. ராகுலிடம் திட்டவட்டமாக சொன்ன அகிலேஷ், மம்தா? 3வது அணி?

Subscribe to Oneindia Tamil

சென்னைய: தேசிய அரசியலிலும் தமிழக அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி முறிவு.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கை கோர்த்ததைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. இந்த அதிரடி மாற்றத்தின் எதிரொலியாக, தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

dmk congress

ஸ்டாலின் முதுகில் குத்திவிட்டார் ராகுல்- கொந்தளிக்கும் மம்தா, அகிலேஷ்

தமிழகத்தில் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு விஜய் தலைமையிலான தவெக அரசுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்த முடிவு, 'இந்தியா' கூட்டணியில் உள்ள பிற மாநிலக் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் காங்கிரஸ் மேலிடத்தின் இந்தச் செயல்பாட்டிற்குத் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவாகவும், இந்தியா கூட்டணியின் தூணாகவும் நின்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சித்தாந்த ரீதியாகத் தோழமையாக இருந்த ஒரு கட்சியை ஓரங்கட்டிவிட்டு, புதிய கட்சியுடன் காங்கிரஸ் கை கோர்த்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று திரிணாமுல் மற்றும் சமாஜ்வாதி தலைவர்கள் காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை!

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தன்னிச்சையான போக்கை மாநில கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தென்னிந்தியாவில் மிக பலம் வாய்ந்த சக்தியாக விளங்கும் திமுகவைக் கழற்றிவிட்டு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது என்று மம்தா பானர்ஜியும் அகிலேஷ் யாதவும் தெளிவாகக் கூறியுள்ளனர்.

திமுக இல்லாத ஒரு இந்தியா கூட்டணிக்கு எந்தவித அர்த்தமும் இல்லை.. அது முகவரியற்ற கூட்டணியாகவே மாறும். மாநிலக் கட்சிகளின் தியாகத்தாலும் உழைப்பாலும் உருவான ஒரு கூட்டணியை, காங்கிரஸின் தவறான அரசியல் முடிவுகள் சீர்குலைத்துவிட்டன.. எனப் பிராந்தியக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

3வது அணி அமைய வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் இந்தத் தலைகீழ் முடிவால் அதிருப்தியடைந்துள்ள திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறத் தீவிரமாக யோசித்து வருகின்றன. காங்கிரஸை ஒதுக்கிவிட்டு, திமுக மற்றும் CJP போன்ற தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவில் ஒரு புதிய 3-வது அணியை அமைப்பதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாகத் தொடங்கியுள்ளன.

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தும் பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு வலுவான கூட்டாட்சி அணியை உருவாக்கத் திட்டமிட்டு வருகின்றன. இதில் சிஜேபி - திமுகவை மையப் புள்ளியாக வைத்துத் தேசிய அரசியலில் நகர்வுகளை மேற்கொள்வதற்குக் டெல்லி மற்றும் கொல்கத்தா வட்டாரங்கள் காய்களை நகர்த்தி வருகின்றன.

அரசியலில் மாறப்போகும் சமன்பாடுகள்

தமிழகத்தில் உருவான இந்த அரசியல் மாற்றம், இப்போது தேசிய அளவிலான கூட்டணியையே தலைகீழாக மாற்றியமைத்துள்ளது. திமுக - காங்கிரஸ் பிளவைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் இருந்து முக்கிய மாநிலக் கட்சிகள் வெளியேறினால், அது வரவிருக்கும் தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகுல் காந்தியின் இந்த முடிவு, தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியிருந்தாலும், தேசிய அளவில் காங்கிரஸைத் தனிமைப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+