தி.மு.கவின் சர்ச்சைக்குரிய தேர்தல் வாக்குறுதி.. கிளம்பியது எதிர்ப்பு.. வேட்பாளர்களை மடக்கிய மக்கள்
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பிற சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் 8 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரச்சாரத்தின் போது, தி.மு.க வேட்பாளர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்புவதோடு, தி.மு.கவினரை விரட்டியடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் 259வதாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சத்தில், "கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கக் காசு வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைதியாக உள்ள தமிழகத்தில் இளைஞர்களை தூண்டி , சாதிய மோதல்களை உருவாக்க தி.மு.க திட்டமிட்டுள்ளதாக அதிமுகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் கருதுகின்றனர். தி.மு.கவின் இந்த அறிவிப்பு பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக பெண்கள் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரங்களுக்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.
-
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!











Click it and Unblock the Notifications