சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ஆம் தேதி திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

DMK convenes All party meeting today at Anna Arivalayam

விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து விவாதிக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி இந்த கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. இதில் மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. உறுதி கூறிய கே.என்.நேரு..!40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை.. உறுதி கூறிய கே.என்.நேரு..!

இந்த நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ஆம் தேதி திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

English summary
Agriculture Bills: DMK convenes All party meeting today at Anna Arivalayam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X