CM விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. சிரித்து ரசித்த மேயர் பிரியா? திமுக பெண் நிர்வாகி மீது வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக, திமுக பெண் நிர்வாகி சுதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி கனிமொழி, மேயர் பிரியா முன்னிலையில் முதல்வர் விஜய் குறித்து சுதா அவதூறாகப் பேசியதாக தவெக நிர்வாகி உதயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

DMK Councillor Vijay

நிகழ்ச்சியில் திமுக மகளிரணி நிர்வாகியும், திமுக பெண் கவுன்சிலருமான சுதா தீனதயாளன் பேசிய சில கருத்துகள் சர்ச்சியானது. நிகழ்ச்சி நடந்து சில நாட்களாகியுள்ள நிலையில், தற்போது தான் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சுதா தீனதயாளன்," ட்டப்பேரவையில் அமர்ந்து, எங்கள் தலைவர் (ஸ்டாலின்) அழகை குறை சொல்கிறார். எங்கள் தலைவருக்கு வயது 74. உனக்கு என்ன வயது 52 வயது தான்" ஆகிறது என்றதோடு, சில வார்த்தைகளையும் பேசினார். மேலும், முதல்வர் விஜய்யை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதாக தவெகவினர் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, பொதுக்கூட்ட மேடையில் திமுக பெண் நிர்வாகி பேசியபோது, அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா சிரித்த நிலையில், கனிமொழி எம்.பி. அந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் எனவும், திமுகவின் மூத்த நிர்வாகியான கனிமொழியே இத்தகைய பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ன? ஏன் அந்த நிர்வாகியின் பேச்சைக் கண்டிக்காமல் மௌனம் காத்தார்? என்று விமர்சனங்கள் தவெகவினரால் முன் வைக்கப்பட்டன.

குறிப்பாக அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா, எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கண்டன அறிக்கை வெளியிட்டனர். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் திமுகவின் நிர்வாகியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதே நேரத்தில் பெண் நிர்வாகி மேடையில் பேசும்போதே கனிமொழி கண்டித்ததாக திமுக மகளிர் அணி விளக்கம் அளித்து இருந்தது.

இந்த நிலையில் தான் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான உதயகுமார் என்பவர் புகார் அளித்த நிலையில் திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான முரளி மீது சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவதூறு பேச்சு மற்றும் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+