ஆன்லைனில் சேட் செய்த பெண்ணை பார்க்க சொத்துகளை விற்று 1,900 கிமீ போன நபர்.. நேரில் பார்த்தால் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேசில் நாட்டைச் சேர்ந்த எடிமர் என்ற நபர், ஏஐ படத்தால் உருவாக்கப்பட்ட பெண் என தெரியாமல் நாம் சேர்ந்து வாழலாம் என்று பேஸ்புக்கில் வந்த மெசேஜை பார்த்துவிட்டு, அவரை தனது கனவுக் காதலியாக நம்பி, அவரைச் சந்திப்பதற்காக 1,900 கி.மீ. பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடி வந்த எடிமர், அந்தப் பெண்ணுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என நம்பி, தனது சொத்துகள் அனைத்தையும் விற்றுவிட்டு அவரைச் சந்திக்க சென்று இருக்கிறார். அப்போது தான் அப்படி ஒரு பெண்ணே இல்லை என அவருக்கு தெரியவந்துள்ளது.

Brazilian man

பிரேசிலை சேர்ந்தவர் எடிமர் மார்ட்டின்ஸ். 49 வயதான இவர் கொத்தனராக வேலை செய்து வருகிறார். பிரேசிலின் வடகிழக்கு மாகாணமான மர்ஹன்ஹோவில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் அறிமுகம் ஆனார்.

தன்னுடன் வந்து விடுகிறீர்களா?

தனிமையில் வாடிய எடிமர் மார்ட்டின்ஸ், அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். பேஸ்புக்கில் 3 லட்சம் பாலோயர்களை கொண்ட அந்த பெண் ஐடிக்கு எல்லோரையும் போல பாலோ செய்த எடிமர் மார்ட்டின்ஸ் இன்பாக்ஸில் பேசியுள்ளார். அந்த பெண்னிடம் இருந்து பதிலும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் பேசி வந்த அவர், ஒரு கட்டத்தில் அவருடன் நெருங்கி பேச ஆரம்பித்துள்ளார்.

பிரேசிலின் கடைகோடியில் உள்ள கிராமத்தில் வசித்து வருவதாகவும், விவசாயம் சார்ந்த பதிவுகளும் அந்த பெண் ஐடியில் வந்துள்ளது. ஒரு கட்டத்தில், எடிமர் மார்ட்டின்ஸை தன்னுடன் வந்து விடுகிறீர்களா? என்று அந்த பெண் கேட்டாராம். என்னோடு வாருங்கள்.. உங்களுக்கு தங்கும் இடம் நிதி உதவி அனைத்தும் செய்கிறேன் என்று கூப்பிட்டுள்ளார். தாய் இறந்த தனிமையில் வாடிய எடிமர் , தனக்கு புதிய வாழ்க்கை அமைய போகிறது என்று நம்பி அந்த பெண் அழைப்பை ஏற்று செல்ல முடிவு செய்துள்ளார்.

ஏஐயால் உருவாக்கப்பட்ட பெண் புகைப்படம்

புதிய வாழ்க்கை துணை கிடைக்க போகிறது என்று மகிழ்ச்சி அடைந்த எடிமர், தனது சொத்துகளை விற்று, சிறிதளவு பணத்துடன் சுமார் 1,600 கிலோ மீட்டர் சென்று அந்த பெண்ணை தேடி சென்றுள்ளார். ஒருநாளுக்கும் மேலாக பேருந்தில் பயணித்து ஒருவழியாக பெலொ ஹோரிசோண்டே நகருக்கு சென்ற எடிமர், அந்த பெண் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு அந்த பகுதி முழுவதும் தேடி அலைந்துள்ளார்.

ஆனால், யாருக்கும் அந்த பெண்ணை தெரியவில்லை. இதனால், என்ன செய்வது என தவித்துப்போன அந்த நபர் உள்ளூர் ரேடியோ ஸ்டேஷனை அணுகி நடந்ததை விவரித்துள்ளார். அதன்பிறகே, எடிமர் கூறியது போல ஒரு பெண்ணே இல்லை என்பது, அந்த ஐடி, பேக் ஐடி என்பதும் தெரியவந்து இருக்கிறது. தீர விசாரித்ததில், ஏஐ யால் உருவாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வைத்து, இன்னொரு நபர் அந்த அக்கவுண்டை பராமரித்து வந்தாராம்.

கண்டுபிடிக்காமல் விடமாட்டேன்

இதனைக்கேட்டதும் ஒரு நிமிடம் இதயமே நொறுங்கிப்போன எடிமர், இத்தனை நாளும் ஏஐ பெண்ணை நம்பியா பேசிக்கொண்டு இருந்தோம் என்று அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "எனக்கு மிகவும் வருத்தமும் வேதனையாகவும் உள்ளது. எனக்கு ஏமாற்றம் மிஞ்சினாலும் பரவாயில்லை. எனது வாழ்க்கை துணையை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன்.

என்னால் அந்த பெண்னை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதே ஊரில் இன்னொரு பெண்ணை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மீண்டும் அங்கு செல்வேன்" என்றார். ஏஐயால் உருவாக்கப்பட்ட பெண்னை நம்பி, சொத்துகளை விற்று செலவு செய்த எடிமருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+