சென்னையில் 100 செமீ மழை பெய்யுமா? வடகிழக்கு பருவமழை எந்த அளவு எதிர்பார்க்கலாம்? தமிழ்நாடு வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு முதல் காலை வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 3 நாட்களில் இரவு முதல் காலை வரை நல்ல மழை பெய்யும் சூழல் இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இதே போன்று இந்த வடகிழக்கு பருவமழையில் சென்னையில் 1,000 மில்லி மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், தென் தமிழகத்தில் தான் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் எல் நினோ பாதிப்பு இருந்தாலும் இயல்பை விட அதிகம் மழை பெய்யலாம் என கணித்துள்ளார்.

Tamil Nadu Weatherman

அடுத்தடுத்த நாட்களில் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அன்றைய தினத்தில் இருந்தே கனமழையும் தமிழகம் முழுக்க பரவலாக கொட்டி வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் கனமழை விட்டு விளாசியது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்தும், இந்த பருவமழை சென்னைக்கு எவ்வளவு மழையை கொடுக்கும் என்பது குறித்தும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

"காற்று திசை மாறி கிழக்கு நோக்கி வீசத் தொடங்குவதால், இரவு முதல் காலை வரையிலான நேரம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் மழை பொழியும் சூழல் அமைந்துள்ளது. அடுத்த 2 , 3 நாட்களில் காற்று இன்னும் சாதகமாக மாறக்கூடும். குறிப்பாக 20 - 21 ஆம் தேதி மற்றும் 21 - 22 ஆகிய தேதிகளில், இரவு முதல் காலை வரையிலான நேரங்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. இன்று இரவு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான குறுகிய கால மழை பெய்யக்கூடும்.

வடகிழக்குப் பருவமழை 2026-ல் எப்படி இருக்கும்?

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் 1,000 மி.மீ. மழையைத் தாண்டி பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடும். எனினும், இந்தக் கணிப்புகள் தற்போதைய வானிலை நிலவரத்தின் அடிப்படையிலான எதிர்பார்ப்புகள் தான்.. உறுதியான முன்னறிவிப்பு அல்ல..

தமிழகத்தின் ஒட்டுமொத்த மழைப்பொழிவானது இயல்பைவிட சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 445 மி.மீ பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக அதாவது, 470 முதல் 520 மி.மீ. வரை மழை பெய்யக்கூடும். அதே நேரம் மிக அதிக மழையாகவோ, மிக குறைவான மழையாகவோ இருக்க வாய்ப்பு குறைவு.

சென்னையில் 100 செமீ மழைக்கு வாய்ப்பு

இதில், சென்னையைப் பொறுத்தமட்டில் இயல்பைவிட அதிகமாகவே பெய்யும். செனையில் இயல்பாக 855 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த பருவமழையில் தற்போது வரை சுமார் 230 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த மழை நிகழ்வுகள் மூலம் 300 மி.மீ. அல்லது அதற்கு மேல் செல்லக்கூடும். மொத்தத்தில் சென்னையில் மட்டும் 1,000 மி.மீ. மழையைத் தாண்ட வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு ஆந்திரா அல்லது ஒடிசா நோக்கி நகர்ந்தால், சென்னைக்குக் கிடைக்க வேண்டிய மழையின் ஒரு பகுதி கிடைக்காமல் போகலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பதிவான மிக அதிக மழை அளவையோ, 1997 ஆம் ஆண்டு தமிழகத்தில் பதிவான 810 மி.மீ. மழை அளவையோ தாண்ட வாய்ப்பு குறைவு தான்.

தென் தமிழகத்தில் அதிக மழை இருக்கும்

தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும். குமரி, நெல்லை, தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

கொங்கு மண்டலத்தில் எப்படி

கோவை, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் மழைப்பொழிவு, வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் மற்றும் மேலடுக்கு காற்றுச் சுழற்சிகளின் நகர்வைப் பொறுத்து தான் அமையும். வரும் அக்டோபர் 20 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் இந்தப் பகுதிகளில் மழை பெய்யும். ஒட்டுமொத்தமாக, கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இயல்பான மழையோ அல்லது சற்று அதிகமான மழை கிடைக்கலாம்.. என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+