சென்னையை பார்த்துக்கிட்டு இருந்தா.. ராமநாதபுரத்தில் வேலையைக் காட்டிய மழை! மக்களுக்கு பறந்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், இடி தாக்கி முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில், ராமநாதபுரத்தில் பழத்தை இடி மின்னலுடன் கூடிய அதீத கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

Heavy Rain

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதே நேரத்தில் வடிகால் அமைப்புகள் முறையாக செயல்பட்டதால் உடனடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் சென்னைக்கு அடுத்த நாள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதன்படி ராமநாதபுரத்தில் இரவு 9 மணிக்கு மேல் திடீரென அதிக கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திலேயே 55 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

ராமநாதபுரம் நகர் பகுதிகளான கேணிக்கரை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வண்டிக்கார தெரு, ரோமன் சர்ச், பெரியார் நகர், சூரங்கோட்டை, விவேகானந்தர் தெரு, சாலை தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், அதேபோல புறநகர் பகுதிகளான பேராவூர், அச்சுந்தன் வயல், கூரியூர், தேவிபட்டினம், குமாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை வெளுத்து வாங்கியது.

இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனிடையே இடி தாக்கி கமுதியில் ஒருவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ராமநாதபுரத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய அதீத கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை ( 10 மணி நிலவரப்படி) 55 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் விடிவதற்குள் 70ஐதாண்ட கூடும் என கணிப்பதாகவும், எனவே மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், உடனடியாக மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+