சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி கைது..டிஸ்மிஸ் செய்த துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர் தனியார் பள்ளியில் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளரும் திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் புகாரில் சிக்கிய பக்கிரி சாமியை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்து துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

DMK councilor arrested for sexually harassing 6-year-old girl dismissed by Duraimurugan

இந்த நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பக்கிரிசாமியை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பக்கிரிசாமி திமுகவை விட்டு நீக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமியிடம் விருத்தாசலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பக்கிரிசாமி மீது புகார் அளித்து 13 மணி நேரம் கழித்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டசபையிலும் இந்த சம்பவம் எதிரொலித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+