மின்சாரம் தாக்கி விபத்து.. அப்ப கூட அசரலயே.. மக்களை வியக்க வைத்த திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி!
சென்னை: தன்னை மின்சாரம் தாக்கிய நிலையிலும், வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் தளராத திமுக கவுன்சிலர் இளம் சுருதியின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி, சென்னை அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட எழும்பூர் பகுதி வார்டு எண் 99ன் மாமன்ற உறுப்பினராக உள்ளார். திமுக சார்பாக போட்டியிட்டு மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சென்னை மாமன்ற கவுன்சிலராகப் பணியாற்றி வருகிறார் பரிதி இளம்சுருதி.

மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை தொடங்கிய நாள் முதலே தனது வார்டு முழுவதும் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் இளம் சுருதி. கொட்டும் மழையிலும், ரெயின் கோட் அணிந்து கொண்டு, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களைப் பார்வையிட்டு, மழைநீரை அகற்றும் பணிகளை முடுக்கி விட்டு வந்தார்.
ராஜா அண்ணாமலை சாலை, அழகப்பா சாலை உள்ளிட்ட தனது வார்டின் அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தி, மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து விரைந்து மீள்வதற்கு துணை நின்றார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் (நவம்பர் 9ஆம் தேதி) அதிகாலை இளம் சுருதி வீட்டில் மின் கசிவால் அவருக்கு மின் விபத்து ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் இளம் சுருதி. இதற்கிடையே, அவர் தனது வாட்ஸ் - அப்பில் வைத்த ஸ்டேட்டஸ், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் சுருதி, தனது பதிவில், "அதிகாலை 4.30 மணி அளவில் எனது இல்லத்தில் ஏற்பட்ட மின்சாரக் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனை செல்ல உள்ளேன். எனவே, ஏதேனும் குறைகள் இருந்தால் குழுவில் பதிவிடவும். மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்து தருவார்கள். மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் களத்தில் வந்து பணியாற்றுவேன்" எனத் தெரிவித்திருந்தார்.
தான் மின் கசிவால் பாதிப்புக் குள்ளாகி மருத்துவமனைக்குச் செல்லும் நிலையிலும், மக்களுக்கான பணிகளில் எந்த சுணக்கமும் இருக்ககூடாது என்பதற்காக, தகவலை பதிவிட்டு, நம்பிக்கை அளித்த இளம் சுருதியை அவரது வார்டு மக்களும், நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.
திமுகவின் சிறந்த கொள்கைப் பேச்சாளராக விளங்கி கருணாநிதியின் பெரும் நம்பிக்கையைப் பெற்றவர் இளம் சுருதியின் அப்பா பரிதி இளம்வழுதி. வீர அபிமன்யூ என மறைந்த முதல்வர் கருணாநிதியில் போற்றப்பட்டவர். 25 வயதில் எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர். 1989 முதல் 2011 வரை தொடர்ந்து 5 முறை எழும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்தார். இளைஞரணியில் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றிய பரிதி இளம்வழுதி, பின்னர் கருத்து வேறுபாடுகளால் அதிமுகவுக்குச் சென்றார்.
எனினும், அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் இளம் சுருதி, திமுகவில் பணியாற்றி வருகிறார். திமுகவின் அயலக அணி துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் பரிதி இளம் சுருதி. மிக்ஜாம் புயல் வெள்ள மீட்பு பணிகளில் ஓடியாடி வேலை செய்த பரிதி இளம் சுருதி, மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி மீண்டும், பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications