5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!
சென்னை: திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்க சிபிஎம் கட்சி தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகரில் தலா ஒரு தொகுதிகளை சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கினால், திமுக தரப்பில் அளிக்கப்படும் 5 தொகுதிகளை ஏற்றுக் கொள்வோம் என்று அக்கட்சியின் அவசர நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை. இதுவரை ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ், மதிமுக, கொமதேக, சிபிஐ ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சிபிஐக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியதால், சிபிஎம் கட்சிக்கும் 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முன் வந்தது.

ஆனால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கடந்த முறை ஒதுக்கிய 6 தொகுதிகளை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், திமுக - சிபிஎம் இடையில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
இப்படியான சூழலில் சிபிஎம் கட்சியின் தேசிய செயலாளர் பேபி சென்னை வந்துள்ளார். இதன் காரணமாக சிபிஎம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அப்போது திமுக தரப்பில் ஒதுக்கப்பட உள்ள 5 தொகுதிகளை ஏற்க சிபிஎம் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கூடுதலாக ஒரு நிபந்தனையையும் சிபிஎம் தரப்பில் திமுகவுக்கு விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை மற்றும் சென்னை புறநகரில் தலா 1 தொகுதியை சிபிஎம் கட்சிக்கு ஒதுக்க திமுக முன் வந்தால், 5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரம்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், திருவொற்றியூர், மதுரவாயல், பல்லாவரம் தொகுதிகளை சிபிஎம் எதிர்பார்க்கிறது.
2001 முதல் 2016 வரை 3 முறை பெரம்பூர் தொகுதியில் சிபிஎம் வென்றுள்ளது. அதேபோல் மதுரவாயல் தொகுதியில் 2011ல் சிபிஎம் வென்றது. இந்த நிபந்தனையை ஏற்க முடியவில்லை என்றால், தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். இதனிடையே பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications