விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின்
சென்னை: கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியுடன், திமுக இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. இதற்கு காரணம் விஜய்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் இருப்பதால்தான் திமுக யோசிப்பதாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுமோ, அதே தொகுதிகள்தான் சிபிஎம்-க்கும் ஒதுக்கப்படும். இப்படி இருக்கையில், சிபிஐ உடன் தொகுதி பங்கீடு சில நாட்களுக்கு முன்னர் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிபிஎம் உடன் தொகுதி பங்கீடு இழுபறியில் இருக்கிறது.

இழுபறிக்கு காரணம் விஜய்தான்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவெடுத்திருக்கிறது. 20க்கும் அதிகமான கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால், தொகுதிகளை குறைத்துக்கொள்ள திமுக கேட்டுக்கொண்டிருக்கிறது. சிபிஐ இதற்கு இறங்கி வந்தாலும், சிபிஎம் வர மறுக்கிறது. அப்படியே இறங்கி வந்தாலும், சென்னையில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறது.
பெ.சண்முகம் வைக்கும் டிமாண்ட்
சென்னையில் சிபிஎம் கட்சிக்கு பலம் இருக்கிறது. குறிப்பாக வட சென்னையில் செல்வாக்கு அதிகம். பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே சிபிஎம் கட்சிக்கு எம்எல்ஏக்கள் இருந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெரம்பூர் தொகுதியில் கட்சி 3 முறை வெற்றி பெற்று கொடி நாட்டியிருக்கிறது.
- 2001-2006 - எஸ்.கே.மகேந்திரன்
- 2006-2011 - எஸ்.கே.மகேந்திரன்
- 2011-2016 - அ.சவுந்தரராஜன்
பெரம்பூரை லாக் செய்த சிபிஎம்
என கட்சி ஹாட்ரிக் அடித்திருக்கிறது. இருப்பினும் கடந்த 2016ல் மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்த தொகுதியைதான் கட்சி டார்கெட் வைத்திருக்கிறது. திமுக கொடுக்கும் 5 சீட்டை ஏற்பது எனில், பெரம்பூர் தொகுதியை கேட்டு வாங்குவது என்று கட்சி மாநில செயற்குழு மற்றும் மாநில குழுவில் பேசப்பட்டிருக்கிறது.
விஜய்தான் காரணம்
ஆனால், விஜய் இந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இது திமுவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தயிருக்கிறது. விஜய்யை உதயசூரியன் சின்னத்தில்தான் தோற்கடிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அப்படி இருக்கையில், சிபிஎம்-க்கு இந்த தொகுதியை எப்படி விட்டுக்கொடுப்பது என்று தலைமை யோசித்து வருகிறது.
கூட்டணி கட்சியா? உதயசூரியன் சின்னமா? என்று கேள்வி வந்தால் கட்சி தலைமை, சின்னம் பக்கம்தான் நிற்கும். எனவேதான் சிபிஎம் கோரிக்கையை ஏற்காமல் இருக்கிறது. இதுதான் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு தாமதமாக காரணம் என்று சொல்லப்படுகிறது.
யோசிக்கும் திமுக
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துதான், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறிவிட்டார். எனவே, சிபிஎம் கட்சியை வெளியவும் போக சொல்ல முடியாது. இதற்கான மாற்று வழியை திமுக தலைமை தற்போது யோசித்து வருகிறது.
ஏன் பெரம்பூரை கேட்கிறது சிபிஎம்?
சென்னையை பொறுத்தவரை, வட சென்னை என்பது தொழிற்சாலைகள் நிரம்பியதாகவும், தென் சென்னை என்பது சாப்ட்வேர் நிறுவனங்கள் நிரம்பியதாகவும் இருக்கின்றன. எனவே இயல்பாகவே வட சென்னை கம்யூனிஸ்ட் கட்சி பக்கம்தான் நிற்கிறது.
மணலி - எண்ணூர் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் உள்ள, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL), மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (MFL), மணலி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (MPL), தமிழ்நாடு பெட்ரோபிராடக்ட்ஸ் லிமிடெட் (TPL), வடசென்னை அனல் மின் நிலையம் (NCTPS), வள்ளூர் அனல் மின் நிலையம் (NTECL), ஹெவி வெகிக்கிள்ஸ் ஃபேக்டரி (HVF), அசோக் லேலண்ட் (Ashok Leyland), ராயல் என்பீல்டு (Royal Enfield), ஐ.சி.எஃப் (Integral Coach Factory - ICF), சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் (எண்ணூர்), இவை தவிர, மாதவரம் பகுதியில் பால் பண்ணைத் தொழிலும் (ஆவின்), தண்டையார்பேட்டை பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகளும் அதிகளவில் உள்ளன.
கட்சியின் பலம்
எனவே இங்கு எல்லா பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி, கிளை அளவிலிருந்து பலமான செல்வாக்குடன் இருக்கிறது. அதிலும் பெரம்பூரில் ஐசிஎஃப் தொழிற்சாலையில் சிபிஎம் கட்சியின் தொழிற்சங்கம் அசுர பலமாக இருக்கிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வாக்களித்தாலே கட்சிக்கு பாதி வெற்றி சாத்தியமாகிவிடும். இது தவிர உள்ளூர் பிரச்சனைகளில் கட்சி தலையிட்டு தீர்வு கண்டிருக்கிறது. இதுவும் கட்சிக்கான வாக்கு வங்கியாக மாறியிருக்கிறது. எனவேதான் பெரம்பூரை லாக் செய்திருக்கிறது சிபிஎம்.












Click it and Unblock the Notifications