அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு கடும் எதிர்ப்பு.. சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி... திமுக போராட்டம்..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் மாநில அரசை மீறி சூரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாநில நிதிஉரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதலாம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. உயர் சிறப்பு அந்தஸ்து என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டும் செல்லும் பணியை சூரப்பா பார்த்து வருவதாகவும், இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனிடையே உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும் கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி திரட்டிக்கொள்ளலாம் என்றும் சூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதே அவர் மீதான எதிர்ப்புக்கு காரணமாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவையும் மாநில அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணியினர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்ககோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications