திமுக கூட்டணியின் மாநாட்டுக்கு ஓவைசியை அழைக்கவில்லை.. திமுக மறுப்பு
சென்னை: திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னையில் நடத்தப்பட உள்ள அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திமுக தலைமை மறுப்பு தெரிவித்து உள்ளது.
நேற்றிரவு ஒரு செய்தி கசிந்தது.. டிசம்பர் 6ம் தேதி சென்னை ஒம்எம்சிஏ திடலில் திமுக சிறுபான்மையினர் அரசியல் மாநாடு நடைபெற இருப்பதாக , இந்த மாநாட்டில் ஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டன.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்றே நம்பப்பட்டது.. காரணம், திமுகவின் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான், ஐதராபாத்திற்குச் சென்று ஓவைசியை சந்தித்து பேசிய போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.. மேலும், சென்னையில் வரும் 6ம் தேதி திமுக நடத்தும் கூட்டத்திற்கு ஓவைசிக்கு மஸ்தான் நேரில் அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதை அந்த கட்சியின் மாநில தலைவர் வஹில் அகமது உறுதியும் செய்திருந்தார்.
இதையடுத்து, ஒருவேளை திமுகவுடன் ஓவைசி கூட்டணி வைக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.. ஆனால், திமுக மாநாட்டில் கலந்துகொள்ள அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை மறுப்பு வெளியிடப்பட்டு உள்ளது..
இதுகுறித்து, மஸ்தானே ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், "திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், வருகின்ற 6.1.2020 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஓவைசியை கூட்டணிக்குள் சேர்க்ககூடாது என்று ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மற்ற கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்றும், திமுக அவசர மறுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications