வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு! அந்தியூர் செல்வராஜ் நியமனம்!
வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு! அந்தியூர் செல்வராஜ் நியமனம்!
சென்னை: தமிழக சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியிடம் இருந்து துணைப் பொதுச்செயலர் பதவியை திமுக பறித்துள்ளது. வி.பி. துரைசாமிக்குப் பதில் ராஜ்யசபா எம்.பி.யான அந்தியூர் செல்வராஜ், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்தார் வி.பி. துரைசாமி. அண்மைக்காலமாக திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார் துரைசாமி.
தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனை நேரில் சந்தித்து வி.பி. துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன் திமுக தலைமையை விமர்சித்தும் பேட்டிகளை கொடுத்து வந்தார் விபி துரைசாமி. இதனால் அவர் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது கட்சி பதவி மட்டுமே வி.பி.துரைசாமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

முருகனுடனான சந்திப்பு குறித்து விளக்கம் கேட்டு விரைவில் விபி துரைசாமிக்கு திமுக தலைமைக்கழகம் நோட்டீஸ் அனுப்பும் எனக் கூறப்படுகிறது. திமுக தலைமைக்கு வி.பி.துரைசாமி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தியூர் செல்வராஜ் நியமனம்
இதனிடையே வி.பி.துரைசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜ்யசபா எம்.பி. அந்தியூர் செல்வராஜுக்கு கொடுத்துள்ளார் ஸ்டாலின். அந்தியூர் செல்வராஜும், வி.பி.துரைசாமியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications