திரும்பி கூட பார்க்காத திமுக! ராகுல் அவ்வளவு பேசியும் வேலைக்கு ஆகல.. கலக்கத்தில் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காதது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தற்போது இந்தியா கூட்டணியின் முக்கியமான கடிதத்தில் திமுக கையெழுத்து போடாமல் தவிர்த்து வருகிறது. இது கூட்டணிக்குள் விவாதங்களையும், காங்கிரஸுக்கு பின்னடைவையும் உருவாக்கியிருக்கிறது.

இந்தியா கூட்டணியின் பலம் அதன் கூட்டணி கட்சியில்தான் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக காங்கிரஸின் அணுகுமுறை கூட்டணி கட்சிகளை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

DMK Didn t Even Look Back at Congress

திமுக ஆப்சென்ட்

குறிப்பாக தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் பிரிந்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது.. இந்த நடைமுறையின்போது காங்கிரஸ் நடந்துக்கொண்ட விதம்.. இதெல்லாம் திமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில்தான் கடந்த 8ம் தேதி டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கெடுக்கவில்லை.

பிறந்தநாள் வாழ்த்து

மட்டுமல்லாது, காங்கிரஸ் குறித்து இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதற்கு முன்னர் சொல்லியிருந்த விமர்சன கருத்துக்களை பேனராக அச்சடித்து, டெல்லியில் வைத்து.. தனது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. இப்படி முட்டல் மோதலாக இருந்த நேரத்தில்தான்.. மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சமாதான பேச்சு

இதற்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி.. இனி இணைந்து பயணிப்போம் என்று சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்தார். இதை தொடர்ந்துதான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் திருமணத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். சரி எப்படியோ, பஞ்சாயத்து முடிந்துவிட்டது.. இனி வழக்கமான அரசியல் பணிகளை தீவிரப்படுத்தலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டு பணிகளை தொடங்கியது.

கையெழுத்து போடாத திமுக

ஜூன் 8 கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை போல, தேர்தலில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், அதன் மூலம் அரங்கேறி வரும் ஓட்டு திருட்டு குறித்தும், வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த நடவடிக்கை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்தில் இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் கையெழுத்து போட்டுவிட்டன. திமுக மட்டும்தான் பாக்கி.. கையெழுத்து கேட்டு டெல்லியில் உள்ள திமுக தலைவர்களை காங்கிரஸ் அணுகியிருந்தது.

ஆனால், திமுக தலைவர்கள் கையெழுத்து போடவில்லை. அடுத்த வாரத்தில் கடிதம் கொடுக்கப்பட வேண்டி இருப்பதால், காங்கிரஸுக்கு இந்த விஷயத்தில் டென்ஷன் எகிறியிருக்கிறது.

டென்ஷன் ஆன காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் 5வது பெரிய கட்சி திமுக. இந்த கட்சியின் கையெழுத்து இல்லாமல் போய் கொடுத்தால்.. பாஜக பார்த்து பார்த்து சிரிக்கும். எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படையாகிவிடும். எனவே இந்த விஷயத்தில்.. திமுகவை எப்படியாவது மீண்டும் உள்ளே கொண்டு வந்தது.. காங்கிரஸின் இமேஜை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+